ஜா.ராஜகோபாலன் நவீனத்தமிழிலக்கியத்தையும் மரபிலக்கியத்தையும் கற்றவர். தமிழிலக்கிய மரபில் புறவயமான பார்வை, இன்று அறிவியல்பார்வை என எண்ணப்படுவதற்கு நிகரான ஒன்று உண்டா என்னும் வினாவை இக்கட்டுரையில் எதிர்கொள்கிறார். பெரும்பாலும் இக்கேள்விகளுக்கு தகவல்கள் இலக்கியங்களில் எப்படியெல்லாம் சுட்டப்பட்டுள்ளன என்றுதான் சொல்வார்கள். ராஜகோபாலன் தகவல்கள் முக்கியமல்ல, கொள்கைகள் அல்லது முறைமைகள் உள்ளனவா என்று ஆராய்கிறார். ஏற்கனவே ஐயப்பப் பணிக்கர், ஏ.கே.ராமானுஜன் போன்றவர்கள் எழுதியவற்றையும் தொட்டுக்கொண்டு ஒரு சிறுநூலாக விரித்தெடுக்கலாம்.