ரொம்ப நாளாச்சு நல்ல காதல் கதை படித்து,ஏனோ தெரியல அறிவியல் மேல அதிக ஈடுபாடு இருக்கறதால காதல் என்பது காமத்துக்கான ஒரு தயார்படுத்தல் என்ற எண்ணம் ஆழமா பதிஞ்சிருச்சி.இப்ப அதுல கொஞ்சம் மாற்றம்.அது ஏன் எல்லாருட்டையும் ஏற்படுவது இல்லை . எவ்வளவு கூட்டத்திலும் நமக்கான ஒரு முகத்தை மனசு ஏன் தேடுது.நிறைய சமயங்களில் ஆத்மா நம்மள அறியாமல் அவங்கள எப்படி பின் தொடருது தெரியல காமம் வேறு காதல் வேறா.காமத்தோடு கள்ளம்கபடமில்லாத பால்வாசனை வீசும் பச்சைக்குழந்தையா காதல்…
இந்ததொகுப்பு காதலுக்கு நிறைய நியாயங்கள் செய்திருக்கு.எல்லாமே மலிவாகிட்ட இந்தக்காலத்தில காதல அத்தனை அழகா கொண்டாடிருக்கு.அனைத்தையும் காமமா பார்க்கிற கண்ணோட்டத்தை மாத்துது.இன்றைய தலைமுறை மனசில ஈரத்தை விதைக்க இதைப்படிக்கலாம்.எல்லாக்கதைகளும் அற்புதம்.கொலைச்சோறு கருவாலி.யமி.கள்வன்மலர்த்துளி ……………… எல்லாம் எல்லாமே அற்புதம்.
எத்தனை அற்புதங்கள் இருந்தாலும் நமக்குன்னு ஒரு விசயம் பிடிக்கும்ல்ல..அந்தக்கதை “சுவை” எந்த அலங்காரங்களும் தேவையில்லாத வீட்டில தூங்கிட்டு இருக்கிற ஒரு முகத்தை பார்க்கிற மாதிரி யான ஒருகாதல் இயல்பான காதல்
தேவி லிங்கம்
மலர்த்துளி வாங்க
மலர்த்துளி மின்னூல் வாங்க
ஜெ படைப்புகளில் எனக்கு விருப்பமானது அவரின் சிறுகதைகளே . நாவல்களே அவருக்கு உவப்பான வடிவம் .அதில் மிக விஸ்தாரமான ஒரு புனைவுலகை , நிகர் உலகை , உருவாக்கி அனைத்து தரப்புகளையும் பேச வைக்கமுடியும் . ஆனால் ஒரு சிறுகதை அதை எல்லாம் சுருக்கி அடர்த்தியாக்கி ஒரு காப்ஸ்யூலாக கோரும் வடிவம் .
சிறுகதை ஒரு தருணத்தை , slice of life ஐ மட்டுமே சொல்கிறது என்றாலும் அதில் ஒரு ஆசிரியரின் ஒட்டுமொத்த அழகியல் பார்வையும் , தத்துவ நோக்கும் , கவித்துவ ஆழமும் , மொழிக்கூர்மையும் ‘குறுகத்தறித்தது’ போல இறங்கயிருக்கும்.திருக்குறளை போல -அடர்த்தியே கூட ஒருவகை அழகுதான.
அதிலும் குறிப்பாக ஜெ எழுதிய காதல் கதைகள் நுட்பமானவை . லட்சியமான அகவய காதலும் வாழ்க்கையின் யதார்த்தமும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் கிளாசிக் தன்மை கொண்டவை . கோவிட் கால முடக்கத்தில் எழுதபட்ட பல காதல் கதைகள் தமிழில் இதுவரை எழுதப்பட்ட ஆகச்சிறந்த சிறுகதைகளின் வரிசையில் வருபவை . சில கதைகள் குறித்து நானும் பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.
அவரின் பிறந்தநாளை ஒட்டி இதுவரை வெளியாகாத அவரின் காதல் கதைகள் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது . நுட்பமான மனித உணர்வுகளை பேசும் கவிஞர் வண்ணதாசனுக்கு இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார் . மிகச்சரியான தேர்வு .சமீப காலங்களில் புனைவு வாசிப்பது குறைந்துவிட்டது but still I’m looking forward to read this .
கார்த்திக் வேலு