சோதிப்பிரகாசத்தின் தத்துவப் பங்களிப்பு தமிழ் தேசிய சிந்தனைகளையும், தமிழ் மரபையும் மார்க்ஸியத்துடன் இணைக்கும் முயற்சி என்று வரையறை செய்யலாம். ஆரிய-திராவிட இனப்பிரிவுக் கொள்கையை மார்க்ஸியக் கோணத்தில் மொழியியல் சான்றுகள் வழியாக விளக்கினார். தமிழின் தனித்தன்மை தமிழர்களை ஒரு தனித்தேசிய இனமாக காட்டுகிறது என வாதிட்ட சோதிப்பிரகாசம் தேசிய இன விடுதலையே மார்க்ஸியத்தின் வழிமுறை என்றார்.
சோதிப்பிரகாசம்
