நீள்விழிப் பீலியில்…

 

மலையாளத்தின் புகழ்பெற்ற காதல்தோல்விப் பாடல்களிலொன்று. அனேகமாக எல்லா நடுவயதினரின் அரங்கிலும் எவரோ உணர்ச்சியுடன் இதைப் பாடுகிறர்கள். இந்தப்பாடலின் யூடியூப் பதிவுக்குக் கீழ் அவ்வளவு உண்மைக்கண்ணீர் கதைகள்

படம் வசனம்

இசை மோகன் சிதாரா

பாடியவர் ஜேசுதாஸ்

எழுதியவர் ஓ.என்.வி.குறுப்பு

நீள்மிழிப் பீலியில் நீர்மணி துளும்பி
நீ என் அரிகில் நிந்நூ
கண்ணுநீர் துடைக்காதே, ஒந்நும் பறயாதே
நிந்நூ ஞானும் ஒரு அன்யனே போல்
வெறும் அன்யனே போல்

உள்ளிலே ஸ்னேகப் பிரவாகத்தில் நிந்நு
ஒரு துள்ளியும் வாக்குகள் பகர்ந்நீல
மானச பாவங்கள் மௌனத்தில் ஒளிப்பிச்சு
மானினீ நாம் இருந்நூ

அக்ஞாதனாம் சகயாத்ரிகன் ஞான் நின்றே
உள்பூவின் துடிப்புகள் அறியுந்நூ
நாமறியாதே நாம் கைமாறியில்லெத்ர
மோகங்ங்கள் நொம்பரங்கள்.

தமிழில்

நீள்விழி பீலியில் நீர்மணி ததும்பியது
நீ என் அருகே நின்றிருந்தாய்
கண்ணீர் துடைக்காமல் ஒன்றும் சொல்லாமல்
நின்றேன் நானும் ஓர் அன்னியனைப்போல்
வெறும் அன்னியனைப்போல்

உள்ளின் சினேகப்பிரவாகத்தில் இருந்து
ஒரு துளியும் சொற்கள் பகிரவில்லை
மனதின் உணர்வுகளை மௌனத்தில் மறைத்து
குலமகளே நாம் இருந்தோம்

அறியாத சகயாத்ரிகன் நான் உன்
உள்பூவின் துடிப்புகளை அறிகிறேன்
நாம் அறியாமல் நாம் கைமாறவில்லையா
எத்தனையோ மோகங்கள் வலிகள் !

சந்தோஷ்குமார்
முந்தைய கட்டுரைமலையில் ஒரு தொடக்கம்…
அடுத்த கட்டுரைவாழ்க்கையை வாழ்வது -கடிதம்