செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி இதழ்களின் வரிசையில் இலக்கியம் வளர்த்த இதழாக தமிழ்ப் பொழில் இதழ் மதிப்பிடப்படுகிறது. அக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் இவ்விதழில் பங்களித்துள்ளனர். தனித் தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்விதழ் இயங்கியது. தமிழில் புதிய பல கலைச்சொல்லாக்கங்கள் உருவாக இவ்விதழ் துணை நின்றது.
தமிழ் விக்கி தமிழ்ப்பொழில்