குருவிக்கரம்பை வேலு

குருவிக்கரம்பை வேலு திராவிட இயக்க எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். வாழ்க்கை வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகியவை அவருடைய களங்கள். குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரது வாழ்கையை ஆவணப்படுத்தினார். குத்தூசி குருசாமியின் கட்டுரைகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டது குருவிக்கரம்பை வேலுவின் முக்கிய பணியாக பதிப்பிடப்படுகிறது. வேலு எழுதிய ‘Tamil kingdom at Harappa’ நூல் சிந்துவெளி, ஹரப்பா நாகரிகம் பற்றிய முக்கியமானதொரு ஆய்வு நூலாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

குருவிக்கரம்பை வேலு

குருவிக்கரம்பை வேலு
குருவிக்கரம்பை வேலு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா
அடுத்த கட்டுரைபுராணமும் அதிகாரமும்