சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல், கடிதம்

”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்

ஜெ,

கவிஞர் சதீஷ்குமார்  சீனிவாசனிடம்  எழுத்தாளர் ரம்யா எடுத்த நேர்காணல் மடை திறந்த புது வெள்ளம் போல் பாய்ந்தது. அதைச் சீராக கடைமடை வரை ரம்யா தன்மையாக எடுத்துச் சென்றதும், கவிஞரின் தெளிந்த  புத்திளம் கருத்துக்கள் எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம், கவிதையில் நாட்டம் இல்லாதவர்களையும் கவிதைகளில்  நாட்டம் கொள்ளும்படி ஊக்குவிக்கிறது.

நன்றி ரம்யா !  2023 ம் ஆண்டு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் சதீஷ்குமார்  சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

முத்துகிருஷ்ணன் வே

*

அன்புள்ள ஜெ

கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் பேட்டி சிறப்பாக இருந்தது. எங்கள் தஞ்சைப்பகுதியில் இருந்து வந்தவர் என்பதில் மகிழ்ச்சி. அவருடைய தேடல்கள் அலைக்கழிப்புகள் போராட்டங்கள் எல்லாவற்றையும் வாசிக்கையில் பதற்றமாக இருந்தது. மிகுந்த கொந்தளிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். படிப்பு வேலை ஏதுமில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இன்றைக்கு இந்த விருது கவிஞர் என்ற அடையாளத்தை அவருக்கு அளித்துள்ளது. இன்று அவர் வெற்றியடைந்துவிட்டார். வாழ்த்துக்கள்.

ஆர்.முருகானந்தம்

முந்தைய கட்டுரைநூற்பு- உதவி
அடுத்த கட்டுரைஇயல் விருது விழா