அசோகமித்திரன் கட்டுரை நூல்- கடிதம்

எனக்கு இரண்டு ஐயங்கள் உள்ளன. ஒன்று, narrative (media narrative, political narrative, literary narrative) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

இரண்டாவது. அசோகமித்திரன் அவர்களின் முழு கட்டுரைத் தொகுப்பை நான் தேடிப் பார்த்தேன். ஏறக்குறைய அனைத்து பதிப்பகங்களும் அந்த முழுத் தொகுப்பை அச்சடிப்பதை நிறுத்தி விட்டனர். நான் எப்படி அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் முழுத் தொகுப்பை வாங்குவது. நான் விசாரித்த வரை எங்கும் அது அச்சில் இல்லை. உங்களால் முடிந்தால் அதனை மறுபதிப்பு செய்து மீண்டும் வெளிக் கொண்டு வர முடியுமா? நான் அதை அச்சடிக்கும் பல பதிப்பக ஆட்களுடனும் பேசிவிட்டேன். அவர்கள் அந்த பதிப்பக உரிமையை யாருக்கும் தருவது இல்லை. அது அச்சில் கிடைப்பதும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. அசோகமித்திரன் மாபெரும் தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவர் ஏன் முதன்மையானவர். அப்படி இருக்கையில் அவரின் கட்டுரைத் தொகுப்பு மறு அச்சிட ஏன் இத்தனை சிக்கல்கள்? நான் நேசிக்கும் இன்னொரு எழுத்தாளர் என்ற முறையில் நான் கேட்கிறேன் ஐயா. தவறாக இருந்தால் அடியேனை மன்னியுங்கள்.

இப்படிக்கு,

இலட்சுமி நரசிம்மன்

*

அன்புள்ள இலட்சுமிநரசிம்மன்

பொதுவாக கட்டுரைநூல்கள் அதிகமாக விற்பனையாவதில்லை. ஆகவே அவை வெளிவர இடைவெளி மிகுதியாக இருக்கும். வேறுவழியே இல்லை. மின்னூல் இருந்தால் வாங்கவேண்டியதுதான்.

narrative என்ற சொல்லுக்கு எடுத்துரைப்பு, கதையாடல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்த தருணங்களுக்கே உரியவை. மொழிபு அல்லது மொழிவு என்னும் சொல் பொதுவாக உகந்தது

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவின் விளைவா உறுதிப்பாடு? -கடிதம்
அடுத்த கட்டுரைபுரவிக்கால்கள், கடிதம்