மொழிபெயர்ப்பாளர் என்றே வேட்டை கண்ணன் அறியப்பட்டிருக்கிறார். ஆனால் 1970 முதல் தொடர்ச்சியாக மார்க்ஸிய நூல்களை பயின்று வந்தவர், மார்க்ஸிய அறிமுகம் செய்துவந்தவர் என்பதே அவருடைய அடையாளம். 72 வயதான வேட்டை கண்ணன் மே 13 அன்று மறைந்த செய்தியை பயணத்தில் இருந்தமையால் சற்றுப்பிந்தியே அறிந்தேன்.
நான் வேட்டை கண்ணனை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அவர் மொழியாக்கம் செய்த சினிமா வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளேன்.