பெண்,கல்வி, விடுதலை- கடிதம்

 

அன்புள்ள ஜெ

அண்மையில் தளத்தில் வெளிவந்த லோகமாதேவி டீச்சரின் கல்வி விடுதலை கடிதத்தை தொடர்ந்து கமலதேவி அவரது வலைப்பக்கத்தில் பெண் கல்விவிடுதலை மற்றும் தன்னறம் என்ற தலைப்பில் தன் அனுபவத்தையும் அவதானிப்புகளையும் எழுதியிருக்கிறார்அதை படித்த ஒரு உந்துதலில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்நான் எழுதிய கடிதத்தை இக்கடிதத்தின் முடிவில் இணைக்கிறேன்.

அதற்கு முன்னதாக டீச்சரின் கடிதத்தை குறித்து சொல்ல வேண்டும்அன்று நள்ளிரவு பதிவு வெளியானவுடனே வாசித்தேன்இயல்பாக வாசிக்க தொடங்கி இரு சொட்டு கண்ணீருடன் முடித்தேன்என் அம்மாவை வீட்டில் உள்ள மற்றவர்களை விட அணுக்கமாக பார்ப்பவன் என்ற முறையில் அவள் தன்னை கணவனால்சுற்றத்தால் தோற்கடிக்கப்பட்டவள் என்று எண்ணுபவள்அதன் விளைவான திரிபுகளும் அவள் ஆளுமையில் உண்டுஅப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மகனாக இந்த வெற்றிக்கதை உளம் பொங்க செய்ததுஒருகணம் நினைத்து கொண்டேன்டீச்சரும் என் அன்னையரில் ஒருவர்வென்று நின்றவர் என்று.

அன்புள்ள கமலதேவி

அகாலத்தின் கனவானவள்

 

அவள் வேறு ஒன்றுமே செய்யவில்லை

அந்த ஒன்றைத் தவிர

எல்லோராலும் கைவிடப்படுவதற்கு

அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது

கழைக்கூத்தாடிபோல தனிமையின் சரடில்

பொழுதெல்லாம் நடப்பவளுக்கு

எந்த அன்பும் சில கணங்களுக்கு வேடிக்கைப்பார்க்கும்

இடையில் அவ்வப்போது கைதட்டும்

யாரோ ஒருவர் என்று மட்டுமே தோன்றியது

 

இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னை

அவளுக்குத் தெரியாது

அதுபோலவே அவளை எனக்கும்

ஆனால்

அவள் அகாலத்தின் கனவாய்

என் பிரக்ஞையின் வெளியில்

சதா நெளிந்துகொண்டிருப்பவள்

இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

இந்த இரவில் அவள் தனது அறைக்கும் திரும்பிக்கொண்டிருக்கலாம்

அன்றாடம் யாருமில்லாத அறைக்கு திரும்பிப்போவது

அவளுக்கு சங்கடமாக இருப்பதில்லை

மொட்டை மாடியில்

எல்லா இரவுகளிலும் நேரம் தவறாமல்

பறக்கும் அந்த ஒற்றைக் காக்கையும்

இறக்குமதி செய்யப்பட்ட அரியவகை பூந்தொட்டிகளும்

வாசலின் முன்னே பசிய இலைகளுடன் விற்றிருக்கும் புங்கையும்

சதுர வடிவக் கண்ணாடித்தொட்டியின் மீன்களும்

தனக்காக காத்திருக்கின்றன என

தனது திரும்புதலுக்கு ஒரு நியாயமிருக்கிருக்கிறதென தான் நம்புவதாக

நம்புகிறாள் அவள்

 

அந்த ஒன்று

அவள் அவளுக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்ய

விரும்பினாள்செய்தாள் என்பதுதான்

உண்மையில்

எல்லோராலும் கைவிடப்பட

அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது

நான் உட்பட

:- சதீஷ்குமார் சீனிவாசன்

இன்று உங்களுடைய மணிகதவில் பெண் கல்விவிடுதலை மற்றும் தன்னறம் பதிவை வாசித்த பின் அண்மையில் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்ட சதீஷ்குமார் சீனிவாசனின் உன்னை கைவிடவே விரும்புகிறேன் கவிதை தொகுதியில் வாசித்த மேற்காணும் கவிதை நினைவில் எழுந்தது.

சதீஷ்குமாரின் இக்கவிதை இக்காலக்கட்டத்து பெண்களின் சிக்கலை பேசுபொருளாக்கியுள்ளதுஅவரது முதல் தொகுப்பில் உள்ள மிக சிறந்த கவிதைகளில் ஒன்றாக குறிப்பிட முடியாதுமுதல்முறை வாசிக்கையில் கடந்து சென்றுவிட்டேன்உங்கள் பதிவை வாசிக்கையில் நினைவில் மின்னியதுநினைவில் மின்னுவது வெற்றியடைந்த கவிதைகளின் இயல்புகளில் ஒன்றுஇக்கவிதையில் திரண்டு வரும் அக்கேள்வியும் அதன் உணர்வுநிலையும் முக்கியமானவை.

இன்றைக்கு தன் தன்னறத்தை தொடர்ந்து செல்லும் பெண்ணை குடும்பமும் சமூகமும் அத்தனை எளிதில் விட்டுவிடுவதில்லைநம் அம்மாக்களின்பாட்டிகளின் காலத்தில் இருந்து பலபடிகள் ஏறியிருக்கிறோம்என் பாட்டி பூப்பெய்தவுடன் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்அம்மா திருமணமான பின் வேலையை கைவிட்டார்இன்று திருமணமான பின் வேலையை கைவிட்டே ஆக வேண்டும் என்று தடலாடியாக கட்டாயப்படுத்துவதில்லைஆனால் இப்போதும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நம் குடும்பங்கள் முயன்று கொண்டே தான் உள்ளனஆனால் சற்று உறுதியான பெண்கள் சமாளித்துவிட முடிகிறதுமேலும் நவீன உலகின் பொருளியல் சுமையும் நுகர்வு கலச்சார கூறுகளும் பெண்ணின் வருமானம் வசதியான வாழ்க்கைக்கு அவசியமானது என்ற எண்ணத்தை சமூக மனதில் ஏற்படுத்துவது பெண்களுக்கு பக்கபலமாக அமைகிறது.

ஆனால் தன்னறம் என்று வந்துவிடுகையில் தடிகளும் தண்டங்களும் மட்டுமே எழுந்து வருகின்றனநாம் அடைய வேண்டிய தூரம் நிறையவே உள்ளதுமுன் சொன்ன வேலைக்கு செல்லுதல் என்ற விஷயத்திலேயே நிறைய நேரம் தடைகள் தான் வந்துவிழுகின்றனஅங்கேயும் கடந்து வென்று வர படிகள் உள்ளனஇன்று தன்னறத்தை கைக்கொள்ளும் பெண்அதனை பிரகடனப்படுத்தி கொள்ள முடிவதில்லைலோகமாதேவி டீச்சர் வெளியே தெரியும் முகம் எனில்தெரியாதவர்கள் பலர்அவர்கள் தங்கள் புற சமூக அடையாளத்தை பேணிய படியே விரும்பியவற்றை நோக்கி பயணப்பட வேண்டியுள்ளது.

உங்கள் கட்டுரையில் பெண்களுக்கு அளிக்கும் வசதியான வாழ்க்கையும் கல்வி முடிந்தவுடன் திருமணம் செய்து கொடுப்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்அது முக்கியமான அவதானிப்புஇன்று கல்வியை கொடுக்கிறார்கள்ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தில் இந்த கல்வியை கூட நம் பெற்றோர்கள் ஒருவகையான வரதட்சணை கணக்கில் வைத்தே செயல்படுகிறார்கள் என்று சொல்வேன்மேலும் இந்த வசதியான வாழ்க்கையை காரணம் காட்டியே வசதியான புகுந்த வீடெனில் ஏன் வேலைக்கு சென்று வீண் சிரமம் என்று பேச்செடுத்து வேலைக்கு செல்வதை நிறுத்துவிடுகிறார்கள்இந்த சொகசுக்கு பழகி நின்று விடும் பெண்கள் ஏராளம்அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்வேலை என்பது பணம் மட்டுமல்லஅதனுடாக வரும் அதிகாரம் என்றுதன்னறம் என்பது நம் ஆளுமை.

அடுத்து உங்கள் தம்பியை பற்றி கூறியிருந்தீர்கள்அவரை போன்ற சென்ற தலைமுறை ஆட்கள் மட்டுமல்லஎன் தம்பியும் அப்படிப்பட்ட மனநிலையில் வளர்வதையே பார்க்கிறேன்ஜெ சொல்வது போல இவர்கள் படித்த அசடுகள் என்றே கொள்ள வேண்டும்உலகியலுக்கு அப்பால் துளியும் எண்ணும் திராணியற்றவர்கள்ஒருவகை மடையர்கள் என்றே கொள்ள வேண்டும்இப்படியிருக்கும் ஒரு சமூகத்தில் பெண்கள் எழுந்து நிற்பது மூச்சுமுட்ட செய்யும் அனுபவமே.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைவாட்ஸப் வரலாறு
அடுத்த கட்டுரைமதுமஞ்சரி- கடிதம்