தமிழில் எழுதிய பெண்படைப்பாளிகளின் பெயர்களில் பூங்கோதை பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. திருச்செங்கோட்டுக் குறவஞ்சி எனும் சிற்றிலக்கியத்தை எழுதியவர் பூங்கோதை .தக்கை இராமாயணம் எழுதிய எம்பெருமான் கவிராயரின் மனைவி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கொங்கு மண்டல சதகம் பூங்கோதையைப் பற்றி, சிறிய இடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர் மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே என்கிறது. திருச்செங்கோட்டுக் குறவஞ்சியை இயற்றியவர் பூங்கோதை என ஏ.இ. ஸ்ரீரங்க முதலியாரின் தலவரலாற்றுச் சுருக்கம் மூலம் அறிய முடிகிறது. பூங்கோதை மதுரை நகரைச் சேர்ந்தவர், எம்பெருமான் கவிராயரை மணந்து சங்ககிரி வந்தார் என்றும், இருவரும் இடையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கொங்கு மண்டல சதகத்தின் மூலம் அறியமுடிகிறது.
தமிழ் விக்கி திருச்செங்கோட்டு குறவஞ்சி