விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
அன்புள்ள ஜெ,
மே மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழ் இவ்வாண்டு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளை முன்வைத்து கடலூர் சீனு ‘இருள் வெளியில் எரியும் சொற்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். நானும், மதாரும் அவரது கவிதைகளைப் பற்றி எங்கள் வாசிப்பனுபவ குறிப்பை எழுதியுள்ளோம்.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு எங்கள் வாழ்த்துக்களும், அன்பும்.
நன்றி,
ஆசிரியர் குழு.