அகமும் புறமும்-கமலதேவி

அன்பு ஜெ,

வணக்கம்.

நலம் விழைகிறேன்.

நான் வாசகசாலை இணைய இதழில் எழுதும் ‘அகமும் புறமும்’ தொடர் இந்த இதழுடன் முடிவடைகிறது. தங்களுடைய சங்கச்சித்திரங்களின் வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்ட கட்டுரைத்தொடர். நான் எழுதும்  முதல் தொடர்கட்டுரைத்தொடர்.  துவங்கும் பொழுது முடித்த பின்பே உங்களுக்கு எழுத வேண்டும் நினைத்தேன். இந்த அத்தியாயத்திற்கு மடலேறுதல் பற்றிய பாடலை எடுத்து எழுதி முடித்தப்பின்  இதுதான் நிறைவு என்று தோன்றியது. தொடரை தொடங்கியதும் இப்படியான ஒரு சட்டென்ற நிகழ்வு தான்.  சங்கப்பாடல்கள் மீதிருந்த தொடர்ந்த வாசிப்பே தொடர் எழுதும் நம்பிக்கையை தந்தது. தொடர் எழுதுதல் போன்ற கமிட்மெண்ட் எனக்கு சரிவராது என்றே நினைத்தேன். ஆனால் இது ஒரு பயிற்சியாக இருந்தது. சங்கப்பாடல்கள் போன்ற செவ்வியல் கவிதைகளை எடுத்து எழுதும் பதட்டம் தொடர் முழுவதுமே இருந்தது. ஒவ்வொரு கட்டுரைக்கும் பாடலை தேர்ந்தெடுக்கும் வரை தான் அந்தப்பதட்டம் இருக்கும்.

இது சங்கப்பாடல்களில் என் தேடலின் துவக்கம் என்று தோன்றுகிறது.  இந்தத்தொடரை உங்களை மனதில் வணங்கித் துவங்கினேன். அது சரியாக முடிவடைந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்பும் நன்றியும் ஜெ.

அன்புடன்,

கமலதேவி

https://www.vasagasalai.com/agamum-puramum-thodar-20-kamaladevi-vasagasalai-71/

முந்தைய கட்டுரைதொலைதூரக் கல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைதுளிகள் – கடிதம்