கூட்டத்துடன் தனித்திருத்தல், என் உரை

பெங்களூரில் நிகழ்த்திய கட்டண உரை இப்போது பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏன் கட்டண உரையாக நிகழ்த்தப்பட்டது என விளக்கியுள்ளேன். இதற்காகவே வந்து அமர்ந்து , முழுக்கவனம் கொண்டிருக்கும் அவையினர் தேவைப்பட்டனர். மேலோட்டமான கவனம் கொண்டவர்களுடன் என்னால் உரையாட முடிவதில்லை.

இப்போது இணையத்தில் கிடைக்கிறது. நேரில் வரமுடியாத, ஆனால் கவனம்கொண்ட சிலருக்கு இது உதவியாக இருக்கக் கூடும். ஆனால் நேரில் வந்தமர்ந்து, அந்த அவையில் ஒருவராக ஆகி, அந்த உரையுடன் மேலெழுந்து அந்த உணர்வுநிலைகளை அடையும் அனுபவம் காணொளிகளில் அமைவதே இல்லை.

முந்தைய கட்டுரைதிருச்செங்கோட்டு குறவஞ்சி
அடுத்த கட்டுரைஅஞ்சலி: வாதூலன்