கற்றல், கடிதம்

கற்றலை அளிப்பது

திரு ஜெயமோகன் குழுவினருக்கு,

இவண் மரகதவல்லி. பெங்களூரில் வசிக்கிறேன். ஜெ-வின் இந்தக் கட்டுரையை https://www.jeyamohan.in/182655/, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். இதில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொண்டு நிறுவன அமைப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டியவை. அந்தத் துறையில் நானும் பணியாற்றுவதால், என்னை இந்தக் கட்டுரை ஆழமாகப் பாதித்தது.

மொழிபெயர்க்க உங்கள் அனுமதி கோருகிறேன்.

என் தமிழ்-ஆங்கில எழுத்து பற்றி அறிய விரும்பினால், என் கட்டுரைகளை இங்கே படிக்கலாம் – https://maggie.wordpress.com

நன்றி.

அன்புடன்,
மரகதவல்லி.

 

அன்புள்ள மரகதவல்லி,

 

மொழியாக்கம் செய்யலாம். நிறையபேர் வாசித்தால் நல்லதுதானே? வாழ்த்துக்கள்

 

ஜெ

முந்தைய கட்டுரைஆலயக்கலை- கடிதம்
அடுத்த கட்டுரைமு.தங்கராசன்