2023 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதினை மூத்த இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன் அவர்களும் எழுத்தாளர் திரு எம் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஏற்க இசைவு தந்துள்ளனர்
இவை தவிர பாடகர் டி எம் சௌந்தரராஜன் நூற்றாண்டையொட்டி கண்ணதாசன் கழகம் சார்பில் திரு வி கிருஷ்ணகுமார் மேலும் இரண்டு சிறப்பு விருதுகள் அறிவித்துள்ளார்.
இதன்படி நூற்றாண்டு நாயகரின் புதல்வர்களான திரு டி எம் எஸ் பால்ராஜ் திரு டி எம் எஸ் செல்வக்குமார் ஆகியோருக்கு சிறப்பு விருதாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசும் விருது பட்டயங்களும் வழங்கப்பட உள்ளன.