அன்னை மகளாக… கடிதம்

குமரித்துறைவி நூல் வாங்க 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 

அன்பு ஜெயமோகன்,

சில ஆண்டுகளுக்குமுன் ஒரு பேட்டியில் இளையராஜாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு அமிதாப் பச்சன் இவ்வாறு கூறினார் – “வெகுசில இசையமைப்பாளர்களின் இசைதான் நம்மில் தொடர்ந்து வளரும்அப்படிப்பட்ட இசையமைக்கும் ஒரு மேதை இளையராஜா“.  

அன்று அது எனக்கு முழுவதுமாகப் புரியவில்லை. பின்னர் வாசிப்பு அளித்த திறப்பில் அவர் கூறியதென நான் புரிந்து கொண்டது –  ஒரு செவ்வியல் படைப்பு அதை அணுகும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு உச்சதருணத்தை அல்லது உணர்வெழுச்சியை அளித்துக்கொண்டேயிருக்கிறது. அதன்மூலம் நம்மில் அது தொடர்ந்து  வளர்ந்து கொண்டேயிருக்கிறதுசமீபத்திய சான்று குமரித்துறைவி.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் வெளியான  அன்றிரவே படித்தபோது உதயனுக்கு அம்மைசெல்லக்குட்டிமகளாகத் தோன்றும் இடத்தை கடந்து செல்ல வெகு நேரமாகியதுஇத்தகு உணர்வுரீதியான பற்பல  தருணங்களும், இக்கட்டான முடிச்சை எளிதாக அவிழ்க்கும் சிறமடம் திருமேனியின்  மேதைமை போன்ற அறிவார்ந்த தருணங்களும் இந்நாவலை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.

அண்மையில் என் மகள்களுக்கு இதை கதையாக சொன்னபோது  கள்வன் கொண்டையத்தேவன் திரைவிலக்கிக் கண்ட காட்சியை சொல்லும் போதேஒரே சமயத்தில் எங்கள் அனைவரின் கண்களும் கலங்கிப்போய் சற்றுநேரம் அமைதியில் கழிந்தது.

இன்று மணக்கோலத்தில் அம்மையைப் பார்த்தபோது  – கனிக்கறுப்பு நிறமும் கையில் பச்சைக்கிளியும் காதுவரை நீண்ட கண்ணும் பொன்னும் வைரமும் மின்ன அவனைப் பார்த்து சிரிக்கும் மூன்று வயது சின்னபொண்ணாகவே – தெரியச்செய்யும்  மாயத்தை குமரித்துறைவி அளிக்கிறது . மனமும் கண்களும் நிறைந்த இந்த இனிய தருணத்தில் உங்களுக்கு என் வணக்கங்கள் ஆசானே

மூர்த்தி ஜி

டல்லாஸ்

முந்தைய கட்டுரைசோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம்
அடுத்த கட்டுரைநீலி- பெண்ணுலகம்