அகழ், அழகிய மணவாளன்

புதிய அகழ் இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் அழகிய மணவாளன் கதகளி பற்றி எழுதியிருக்கும் மாயக்கொந்தளிப்புஓர் அழகான கட்டுரை. கதகளி ஒரு செவ்வியல் கலை. நுணுக்கமான ரசனை வழியாக மட்டுமே அதை தொடரம்முடியும். அழகியமணவாளன் பல ஆண்டுகளாக கதகளிமேல் பித்து கொண்டிருக்கிறார். மெய்யான கலையை அறிந்தவர்கள் அதை கொள்கை, கோட்பாடு என அல்லிவட்டம் புல்லிவட்டமாக பிரிக்க மாட்டார்கள். அதன்மீதான எதிர்வினை இன்னொரு கலைவெளிப்பாடாக இருக்கும். இது அத்தகைய கட்டுரை

விஷால்ராஜா டெர்ரி ஈகிள்டனின் கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். ஏ.வி. மணிகண்டனின்  வெற்றுவெளியில் ஒரு தோரணவாயில் கட்டுரையிலுள்ள அந்த வாசலை ஜப்பானில் நான் பார்த்திருக்கிறேன். உமாமகேஸ்வரியின் நித்யஜாதம் கதை வெளியாகியுள்ளது

அகழ் இணைய இதழ்

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை-59
அடுத்த கட்டுரைபன்னிரு காதல்கள், கடிதம்