பெண்ணெழுத்தாளர் பெயர் சூட்டுவது…

அன்புள்ள ஆசிரியரே,

நலம்தானே? உங்களிடம் ஒரு நற்செய்தி கூறவேண்டும்  எங்களுக்கு இரண்டாவது குழந்தை வரும் செப்டம்பர்,2023 மாதம் பிறந்துவிடும்.

எங்களுடைய முதல் குழந்தை பெயர் அசோகமித்திரன்,  மூத்த  தமிழ் எழுத்தாளர் பெயர் வைத்தோம்.

இரண்டாவது குழந்தைக்கும் தமிழ் எழுத்தாளர் பெயர் வைக்கவேண்டும் என்ற பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றோம்.

ஓர் உதவி. உங்களுக்கு பிடித்த பெண் பிரபலமான எழுத்தாளர்கள் பெயர் சொல்லுங்கள். அதைவைத்து நாங்கள் பெயர் வைத்துக் கொள்வோம்.

இப்படிக்கு,

தமிழ்ச்செல்வன்,

சேரன் மாநகர், கோவை

*

அன்புள்ள தமிழ்ச்செல்வன்,

முதன்மையான பெயர் அம்பை. அம்பா அல்லது அம்பா லட்சுமி என்று வைக்கலாம். அடுத்தபடியாக குமுதினி.

தமிழில் எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர்கள் பலர். பழைய தலைமுறையில் வை.மு.கோதைநாயகி, விந்தியா. முந்தைய தலைமுறையில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் முதன்மையானவர். சிவசங்கரி வாசந்தி இருவரையும் வெவ்வேறு கோணங்களில் பிடிக்கும்.

என் தலைமுறையில் பெருந்தேவி. எனக்கு அடுத்த தலைமுறையில் உமா மகேஸ்வரி, லீனா மணிமேகலை, அ.வெண்ணிலா, சந்திரா, கலைச்செல்வி என பலர்.

அதற்காக எழுத்தாளர் அருண்மொழி நங்கை கொஞ்சமும் குறைந்தவர் என்று அர்த்தமில்லை (ஸ்மைலி போட்டுக்கொள்ளவும்)

ஜெ

முந்தைய கட்டுரைஅக ஆழம், கடிதம்
அடுத்த கட்டுரைவேதநாயகம் சாஸ்திரியார்