தமிழ் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் பொருட்டு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடர்ந்து இசைக்கோவையும், ஆவணப்படங்களும் எடுத்து வருகின்றது. அந்தத் தொடர் முயற்சியில் இப்பொழுது, தமிழர்களின் சிந்தனையை கூர்மைபடுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தனை , கொண்டாடும் பொருட்டு, ராஜன் சோமசுந்தரம் இசையில் புதிததாக ஒரு இசைவட்டு வெளிக்கொணர்கிறது. அரைத்தூக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் வழியே, சிறு புன்னகையுடன் சித்தர் ஒருவர் நடந்து செல்வதாக, ஒரு சந்தர்ப்பத்தை உருவகித்துக்கொண்டு , ஜெயகாந்தன் எழுதிய மூன்று கவிதைகளை எடுத்துக்கொண்டு இசையமைத்துக் கொடுத்துள்ளார். பாடகர் சத்யப்ரகாஷ் அவர்கள் அதை உணர்ந்து பாடியுள்ளார். ஷயர்லி கஸுயோ (Shirley Kazuyo) அவர்கள் கோட்டோவும், தென்னமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்மரி ரிவேரோ (Osmary Rivera) மாண்டலினும், மிதுன் அவர்கள் புல்லாங்குழலும் வாசித்துள்ளார்கள்.
ஜெயகாந்தன் பிறந்தநாள் ஏப்ரல் 24 என்பதால், இதுவே சரியான தருணம் என, அவரை அணுக்கமாக வாசித்த, தனது கதைசொல்லல் வழியாக இன்று வரை வாசகர்களிடம் அவரை எடுத்துச்செல்லும் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை இந்த இசைவட்டை, ஏப்ரல் 22 அன்று இணையவழி நிகழ்வில் வெளியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். இளையராஜா அவர்கள் இசையில் ஜெயகாந்தனை ஆவணப்படம் எடுத்த இயக்குனர் ரவிசுப்பிரமணியன், அவர் கதைகளை வாசித்து வளர்ந்த, தமிழ்ச்சிறுகதைகளை தனது சிறப்பான பேச்சால் எடுத்துச் செல்லும் பாரதி பாஸ்கர் அவர்கள், தமிழிலக்கிய முன்னோடிகளின் சிறப்பை இலக்கிய அரங்கில் தொடர்ந்து முன்வைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள். இப்பொழுதும் ஜெயகாந்தனை வாசிக்கும் இள வாசகன் ஒருவர் உண்டா என்ற தேடலில் கிடைத்த R.S. சஹாவையும் பேச அழைத்திருக்கிறோம். நண்பர்கள் இணையவழி நடக்கும் இந்த இசைவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Date : Apr 22, 2023
Time : 8:00 PM IST/ 9:30 AM CST / 10:30 AM EST
Zoom Link : https://us02web.zoom.us/j/
YouTube : https://www.youtube.com/@
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா).