தில்லை பேட்டி, கடிதம்

தியானமுகாம், தில்லை – கடிதம்

தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

அன்பு ஜெ.,

நலம்தானே? தில்லை செந்தில் பிரபு அவர்களை  விஜயகுமார் சம்மன்கரை எடுத்த பேட்டி மிகவும் அருமை. சாதாரணமான உரையாடலாக தென்பட்டாலும் செந்தில் பிரபு அவர்களின் ஆளுமையை குறுக்குவெட்டு தோற்றமாக சித்தரித்து உள்ளார். அவரின் கருத்துகளை, வாழ்க்கை பார்வையை அற்புதமாக படம் பிடித்தார். கட்டாயங்களை(compulsions) தவிர்ப்பதற்கு யோக சாதனை என்ற கருத்தின் மையமாக செல்லும் பேட்டி… ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தரும் கசப்புக்கு உக்கியாக ‘குமரி துறைவி’யை பரிந்துரைக்கும்  இடங்கள் அலாதியானவை.

ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் சொல்லமுடியும்… இப்படி ஒரு பேட்டியை எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. அமெரிக்க பத்திரிக்கைகளில் narrative முறையாக இப்படி வடிவமைப்பார்கள்.  நம்மிடம் அந்த முயற்சிகளே இல்லை. கேட்டால்… அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பார்கள். உண்மையில், அது மட்டுமே காரணம் அல்ல… narrative-ஸ்டைல் எழுதுவோர் எழுத்தாளுமையாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் பல்லிளித்துவிடும். இது ஒரு நல்ல எழுத்தாளுமை எடுத்த போட்டியாகவே அமைந்தது. விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

மிக்க அன்புடன்,
ராஜு

ஹைதராபாத்
அன்புள்ள ராஜூ
விஜயகுமார் சம்மங்கரை கதைகள் எழுதி வருகிறார். மிருகமோட்சம் மற்றும் பிற கதைகள் என ஒரு தொகுதி வெளியாகியுள்ளது.
ஜெ
முந்தைய கட்டுரைரங்கனும் அவருடைய மொழியாக்கங்களும்
அடுத்த கட்டுரைகொங்கு மண்டல சதகம்