மரபுக்கவிதைகள் சிறப்பிதழ்

அன்புள்ள ஜெ,

ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் ‘மரபு கவிதைகள்’ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் ‘செய்யுளிலிருந்து கவிதைக்கு’ என்ற தலைப்பில் கடலூர் சீனுவும், கம்பராமாயணம் குறித்த வாசிப்பனுபவத்தை ஸ்ரீநிவாஸும் (மினல் மணிக் குலம்), காரைக்கால் அம்மையாரின் பாடல் பற்றி பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனும் (ஆடவல்லானின் ஊர்த்துவம்), காளிதாசனின் ரகுவம்சம் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாஸும் (தூண்கள் இல்லா தோரணங்கள்) எழுதியுள்ளனர். சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழில் 1960 ஆம் ஆண்டு சி. கனகசபாபதி எழுதிய ‘புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

முந்தைய கட்டுரை“குமரித்துறைவி” அன்பளிப்பு விழா, ஜெ பிறந்த நாள் விழா
அடுத்த கட்டுரைபேயும் தர்க்கமும் -கடிதம்