விடுதலை, இடதுசாரிகள் – கடிதம்

திருமாவும் விடுதலை சினிமாவும்

வணக்கம் அய்யா ,

2020 ல் எம்.எல். அமைப்புகளின் தலைமைச் சிந்தனையாளரும், எம்.எல் அமைப்புகளையே நிறுவியவருமான மருதையன் அவதூறு செய்யப்பட்டு, ஆளுமைக்கொலை செய்யப்பட்டு இன்று உளமொடுங்கி அமர்ந்திருப்பதை நினைவுகூருங்கள்.

இந்த கட்டுரையில் மருதையன் பற்றி சொல்லி இருப்பது தவறான கருத்தாகும்.  இன்றைக்கு நடுநிலையோடு அரசியல் கருத்துக்களை படிக்க, தெரிந்து கொள்ள உங்கள் தளமே பயன்படுகிறது (point of reference). பல்லாயிரம் இளைஞர்கள் வரலாறை உங்கள் வழியாகவே அறிந்து கொள்கிறார்கள் . கீழே உள்ள சுட்டி soc, மகஇக ஆகியவற்றின் வரலாற்றை விளக்குகிறது . (பார்க்க)

மாலெ அமைப்புகள், கருத்துக்களோடு பரிச்சயம் உடையவர்கள் நன்கு அறிந்த விவரங்கள் தான் மேற்கண்ட சுட்டியில் உள்ளவை.

ஆளுமை கொலை பற்றிய கருத்து முற்றிலும் உண்மையானதே. பின் தொடரும் நிழலின்  குரல்  எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை எந்த மார்க்சிய அமைப்பும் (வழக்கமான முத்திரை குத்துதல் தாண்டி ) பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு நாவல் எழுப்பும் கேள்விகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு நுண்உணர்வு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது

பிரசன்னா

துணைவன்: மின்னூல் வாங்க

துணைவன் நூல் வாங்க 

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை மிக விரிவான ஒரு பார்வையை அளிக்கிறது. உண்மையில் 37 வயதான எனக்கே இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியும் மாறிமாறி கொலை செய்துகொண்டதும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி  நக்சலைட் வேட்டையில் காங்கிரஸுக்கு ஆதரவளித்ததும் எல்லாம் புதிய செய்திகள்.

விடுதலை சினிமா வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கிறது என்பதே எனக்கு புதிய செய்திதான். 1980களில் எம்.எல் குழுக்கள் தமிழகத்தில் செயல்பட்டன. வாச்சாத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடைபெற்றது. அதைக்கூட இங்கே பேசுபவர்கள் வெளிப்படுத்துவதில்லை. வாச்சாத்தி சம்பவத்துக்கு சிபிஎம் தான் முன்னணியில் நின்று போராடியது. அந்த அறிக்கையை ஒட்டியே வாச்சாத்தி என்ற சினிமாவும் வந்துள்ளது. அதையெல்லாம் ஒட்டியே விடுதலை சினிமா எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தெரியாமல் வாச்சாத்தி விஷயத்தை எதிர்த்து எம்.எல் குழுவினர் போராடினர் என்றும், வீரப்பன் வேட்டையில் நிகழ்ந்தவை எல்லாம் நாவல்கள் வழியாகத்தான் வெளியே வந்தன என்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விரிவான சித்திரத்தை அளித்தமைக்கு நன்றி

ஜே.சிவபாலன்

முந்தைய கட்டுரைAn excerpt from ‘The Abyss’
அடுத்த கட்டுரைதியானமுகாம், தில்லை – கடிதம்