மாடன் மோட்சம், மலையாளத்தில்

மாடன் மோட்சம் கதையை நானே மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தேன். ஆகவே கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு மலையாளத்திற்குரிய பகடிகளும், நுண்ணிய கேலிகளும் கலந்து எழுதினேன். அதை மலையாள மனோரமா நிறுவனத்தின் பாஷாபோஷிணி  இதழின் ஆண்டுப்பதிப்புக்கு அனுப்பினேன். (அதில்தான் அறம் கதைகள் ஏறத்தாழ எல்லாமே வெளியாகியிருந்தன) ஆனால் அவர்கள் அதை வெளியிடவில்லை. ஏற்கனவே மதம் சார்ந்த கருத்துக்களுக்காக மனோரமா விவாதங்களுக்கு ஆளாகியுள்ளது, மீண்டும் ஒன்றை விரும்பவில்லை என்றனர். என் நண்பர் கே.சி.நாராயணன்தான் அப்படிச் சொல்லி திருப்பி அனுப்பியவர். ஆகவே அப்படியே தூக்கி வைத்துவிட்டேன்.

பெங்களூர் இலக்கியவிழாவில் பதிப்பாளர் ரவி.டி.சியைச் சந்தித்தேன். அவர் பாஷாபோஷினி ஆசிரியர் கே.சி.நாராயணன் இப்படி ஒரு கதை கையில் உள்ளது, அற்புதமான கதை என்றார்களே என்று என்னிடம் கேட்டார். கைப்பிரதியை தேடிப்பார்க்கிறேன் என்றேன். கைப்பிரதி கிடைத்தது, அனுப்பி வைத்தேன். அது இப்போது நாவல் ஆக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரண்டு படங்கள். முன்னுரை, பின்னுரை. மொத்தம் நூறு பக்கங்கள். நூற்றி முப்பது ரூபாய் விலை.தள்ளுபடி விலை 117 ரூபாய்.

’நாவல்’ வெளியாவதை ஒட்டி டி.சி. புக்ஸ் நிறுவனத்தின் மாத இதழான கரண்ட் புக்ஸ் புல்லட்டின் அட்டைப்படக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. புத்தகம் இதற்குள்ளாகவே ஆயிரம் பிரதிகளைக் கடந்து விற்றுக்கொண்டிருக்கிறது.

Madan Moksham Malayalam DC Books

முந்தைய கட்டுரைஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்-கடிதம்
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை, கடிதம்