நலமா?
வழக்கம் போல சில ஆய்வு கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். தேடல் இடையே Signe Cohen (இணைப்பேராசிரியர் , சமயத்துறை , Missouri பல்கலைக்கழகம் ) எழுதிய Dharma : Enthiran 2.0 என்னும் ஆய்வுக்கட்டுரை கண்ணில் பட்டது . Cohene ஹிந்து , பௌத்த மதங்களில் உள்ள இயந்திர மனிதர்களை குறித்து ஆய்வுகளில் இப்போது ஈடுபட்டிருக்கிறார் . முன்னர் உபநிடங்களின் காலம் குறித்து ஆய்வுகளை செய்துள்ளார் .
பின்காலனித்துவம் போலவே Post Humanism மும் (பின் மானுடத்துவம்) இப்போது கல்விப் புலங்களில் அதிகம் விவாதக்கப்படும் கோட்பாடு . மேற்குலக சிந்தனைகளை கட்டுடைக்க நல்ல கருவி .
Post Humanism அத்வைத வேதாந்தம் ஆகியவற்றின் அடிப்படைகளைக் கொண்டு (இவை இரண்டும் தொடர்புடையவை என்கிறார்) 2.0 வை புரிந்து கொள்ள முயல்கிறார். ஏராளமான கல்விப் புலம் சார்ந்த தேய்வழக்குகளும் போதாமைகளும் விபரீத புரிதல்களும் இருந்தாலும் குறிப்பிடத்தக்க முயற்சி என்று எண்ணுகிறேன். ஆகவே உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்