இன்று காலை ( மார்ச் 5 ம் தேதி 05.03.23. ஞாயிறு) காலை 10 மணிக்கு, ஈரோடு வெள்ளாளர் கல்லூரி கூட்டரங்கில் மருத்துவ ஜீவா பசுமை விருதுகள் அளிக்கும் விழா நிகழவுள்ளது. எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், பவா செல்லதுரை மற்றும் அக்னி தங்கவேலு, அன்புராஜ், பாலு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
நாட்டாரியல் ஆய்வாளரும், தமிழ் விக்கி தலைமை ஆசிரியருமான அ.கா.பெருமாள் அவர்களுக்கும்; திருநங்கைகள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் ‘தோழி’ எனும் அமைப்பை 1990களில் தோற்றுவித்து முப்பது ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் திருநங்கை சுதா அவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது.
ஜெ