செட்டிநாடு ஒரு காலகட்டத்தில் இலக்கியம், இதழியல், சமூகசீர்திருத்தம் ஆகியவற்றுக்கு விளைநிலமாக இருந்தது. அன்றைய ஆளுமைகளில் முதன்மையானவர் சொ.முருகப்பா. அவருடைய வாழ்க்கையை தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் துளியுதாரணமாகவும் கருதலாம். காந்தியவாதியும் கம்பனின் மேல் பெரும்பக்தி கொண்டவருமான அவர் பின்னாளில் பெரியாரியராக மாறினார்.