வல்லினம், மார்ச் 2023

வல்லினம் மார்ச் இதழ் பதிவேற்றம் கண்டது. அண்மையில் மரணமடைந்த ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம் இவ்விதழில் முதன்மையானது: தான் வாழும் வரை அதனை எங்கும் வெளியிட வேண்டாம் என ந. பாலபாஸ்கரன் கேட்டுக்கொண்டதால் இன்று அதனை வெளியிடுகிறோம்.

ந. பாலபாஸ்கரன் ஆவணப்படம்

ந. பாலபாஸ்கரன் குறித்த விரிவான கட்டுரை ஒன்றை லதா எழுதியுள்ளார்.

ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்

முதன்முறையாக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் சிறுகதை இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. சாம்பல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும் ஒரு சிறுகதை நூல் விமர்சனம் எழுதியுள்ளேன்.

அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

மேலும் மூவிலை தளிர், உய்வழி, அன்னம், பிரிட்னி, வீடு திரும்புதல் ஆகிய சிறுகதைகளும் பட்டவன் என்ற குறுநாவலும் இவ்வல்லினத்தில் இடம்பெற்றுள்ளது.
அ. பாண்டியன், அரவின் குமார் ஆகியோர் கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

வல்லினம் இணைய இதழ்

ம.நவீன்

அன்புள்ள நவீன்,

கடலூர் சீனு, பிரதீப் கென்னடி, கிருஷ்ணன் சங்கரன் என புதிய கதையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். லெ.ரா.வைரவன் , லோகேஷ் ரகுராமன் என அறிந்த பெயர்களும். சிறப்பு

ஜெ

முந்தைய கட்டுரைகல்வியாளர் ஜெயபாரதிக்கு கிருஷ்ணய்யர் விருது
அடுத்த கட்டுரைகுறுந்தொகை வகுப்புகள்