ஒரு நடிகர் ஏன் நமக்கு முக்கியமானவராகிறார்? நாம் அவருடன் சேர்ந்து வளரும்போது என்று படுகிறது. கமல் நடித்த மிகப்பழைய பாடல்களைப் பார்ப்பேன். பெரும்பாலும் மலையாளத்தில். அரிதாக தமிழில் அன்று அவர் பாடல்களில் நடனமாடி, ஒரு சின்ன வில்லத்தனம் செய்துவிட்டுச் செல்லும் குட்டிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
1974 வெளிவந்த பணத்துக்காக அவரே நடித்த மலையாளப்படத்தின் தமிழ்வடிவம் (கோவிந்தன்குட்டி என்னும் நடிகர் -திரைக்கதையாசிரியர் எழுதியது) அப்போது கமலுக்கு 19 வயது. எனக்கு பன்னிரண்டு வயது. நான் அவரை அருமனை திரையரங்கில் பார்த்தபோது மானசீகமாக உடன் நடனமாடினேன். அந்த தோசைக்கல் கண்ணாடி…அது ஒரு மாயக்கண்ணாடி அன்றெல்லாம். இன்று அவர் வழியாக திரும்ப காலத்தில் மூழ்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்