குறுந்தொகை வகுப்புகள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். 2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், காந்தியரான கண்ணன் தண்டபாணியின் மனைவியும் மருத்துவருமான நித்யா என்னைச் சங்க இலக்கியம் கற்றுத்தர இயலுமா எனக் கேட்டார். Zoom மூலமாக நண்பர்கள் சிலர் சேர ஒரு வியாழனன்று வகுப்பு தொடங்கியது.

ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தொடர்ந்து, வியாழக்கிழமைகளில் வகுப்பு எடுத்து, இதோ 23.2.23  அன்று முழுமையாக குறுந்தொகை 401 பாடல்களும் பாடமாக நடத்தப்பட்டுவிட்டன.

நான் பார்வைத் திறனற்ற சில மாணவிகளுக்கும் பாடங்களை ஒலிப்பதிவு செய்து தருவதுண்டு.தமிழைப் பயிலும் அம்மாணவிகள்.

பாடல்களைப் பிரித்துப்படித்து பொருள் கூறுபவர்களைத் தான் தேடுகிறார்கள்.மரபு வழியில் பாடம் நடத்துவது போன்றே இந்தக் குறுந்தொகை பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் தளத்தில் வெளியிட்டால், இன்னும் நிறைய பேர் பயன்பெறுவார்கள்.

வணக்கத்துடன்

சித்ரா பாலசுப்ரமணியன்.

குறுந்தொகை வகுப்புகள் இணைப்பு


மண்ணில் உப்பானவர்கள் – வெங்கி

முந்தைய கட்டுரைவல்லினம், மார்ச் 2023
அடுத்த கட்டுரைசிப்பியின் வயிற்றில் முத்து – வெங்கி