நூலக அடுக்கிலே…

Stories Of The True -வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

நலமே விழைகிறேன்.

கடந்த செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories  of  the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் நூல்களை கொடையளிக்கலாம் என்பதால் எளிதாக முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது.

கொடையளிக்கப்படும் நூல் நேரடியாக நூலடுக்குக்கு செல்லாது. அது விற்பனைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் நூலகத்துக்கு செல்லும் என்பதே வழிமுறையாம். எனது நோக்கம் பலருக்கும் இந்நூல் வாசிக்கக் கிடைக்கவேண்டும் என்பதாக இருந்ததால், நூலக ஊழியர்களிடமும் தலைமை நூலகரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். அவர்கள் கூறிய அதிகபட்ச வாய்ப்பு, அவர்கள் இணையப்பக்கத்தில் நமக்கு வேண்டிய நூலை வாங்குமாறு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் புத்தக இருப்பு (அமெரிக்காவில்) போன்ற சில காரணிகள் இவ்வழியையும் அடைத்தது.

மேலும் சிலநாள் முயற்சியில், ஒரேயொரு வழி இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் கூறியது ராஜபாட்டை. ஆம், புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பவேண்டியதுஅவர்களின் ஒரு குழு வாசித்து முடிவெடுக்கும். அவர்கள் ஏற்றால் நூல் நூலக அடுக்குக்கு செல்லும்பொது மக்களுக்கு கிடைக்கும். இல்லையேல், முதல் வழி தான்இதைக் கேட்ட மறுநொடி தயங்காமல் சரியென்றேன்கெத்தேல் சாகிப், டாக்டர் கே , வணங்கான் நாடார் எல்லோரையும் நம்பி

மூன்று வார காத்திருப்பில், நூல் கடந்த வாரம்  இர்விங் பொது நூலக அடுக்கில் சேர்க்கப்பட்டது.

இனி அடுத்த கட்ட சோதனை, தொடர் சுழற்சி. நூல் தொடர்ந்து / குறிப்பிடத்தக்க அளவில் மக்களால் எடுக்கபடவேண்டும். இல்லையேல், மீண்டும் முதல் வழி தான். உங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் ஒரு பெரிய குழுவிற்கு அறிவிப்பதன் வாய்ப்பிருப்பதால் இக்கடிதம். தயவு செய்து உதவவும். நன்றி

என்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ் 

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம்- 3
அடுத்த கட்டுரைஒலேஸ்யா, அலக்ஸாண்டர் குப்ரின்- வெங்கி