ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம்

சைதன்யா

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் -சைதன்யா

விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி – சுசித்ரா

விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – சிமோன் தி பொவா – விக்னேஷ் ஹரிஹரன்

நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி ஜெயமோகன்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்

அன்புள்ள ஜெ,

சைதன்யா எழுதிய ‘நிலவறை மனிதனின் அன்னை’ கட்டுரை வாசித்தேன். இந்த கட்டுரையும் சரி, சென்ற இதழில்  வெளியான ‘அந்த விடியலின் பேரின்பம்’, விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய ‘விலாஎலும்பின் விடுதலைப் பிரகடனம்’ ஆகிய கட்டுரைகளும் சரி, அறிவார்ந்தவை. முற்றிலும் ஐரோப்பிய உலகம், அதன் வரலாறு ஆகியவற்றில் கால் ஊன்றி  அவற்றின் சிந்தனை மற்றும் அழகியல் அரசியல் போக்குகளை ஆராய்பவை. எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று கட்டுரைகளின் தலைப்புகளும் மிக அழகானவை. அந்தத் தலைப்புகளைக் கொண்டே முழுக் கட்டுரையையும் தொகுத்து கொண்டுவிடமுடிகிறது.

‘நிலைவறை  மனிதனின் அன்னை’ கட்டுரையும் அதை தொடர்ந்து தங்களின் ‘பேரிலக்கியவாதிகள்  மறைந்து போகும் குகை வழி’ என்ற கட்டுரையும் வாசித்தேன். அந்த கட்டுரையில் மென்மையாக வெளிப்படும் கருத்தை நீஙகள் வலிமையாக ஆக்கியுள்ளீர்கள். தலைப்புகளிலேயே அந்த வேறுபாடு உள்ளது.

ஜார்ஜ் சாண்ட்-ஐ  வாசித்துதான் என் முழு கருத்தை  உருவாக்கிக்கொள்ள  வேண்டும்.  ஆனால் அதற்க்கு முன் உங்களுடனான  என் முரண்பாடுகளை சொல்கிறேன். அல்லது  ஐயங்களை.

ஒரு பெண்ணின் பார்வைக் கோணத்தில்  இருந்து தஸ்தயெவ்ஸ்கியின் தேடலும் தத்தளிப்புகளும் விடைகளும் என்னவாக பொருள்படுகின்றன  என்பது முக்கியமான  கேள்விதான்.  ஆனால் தஸ்தயெவ்ஸ்கி முக்கியமான கலைஞனாக இருப்பதற்கு  அவருடைய கதைகளில் வெளிப்படும் தரிசனம் மட்டும்தான் காரணமா ? ஒரு மகத்தான  கலைப்படைப்பு தரிசனத்தின் துணைக்கொண்டு மட்டும் அமைவதுதானா ? மகத்தான கலையில் ஒரு மையச்  சரடுதான் அதன்  தரிசனம். ஆனால் வெறும்  சரடு கலையாவதில்லை. அவை எவ்வாறு எல்லாம்  பின்னப்பட்டிருக்கின்றது என்பதை  கொண்டே அவை அப்படி உருவாக்கின்றன.

விக்னேஷ் ஹரிஹரன்

இருளில் இருந்து ஓளி நோக்கி எழுதிய எழுத்தாளர்கள் அவ்வளவு சாதரணமானவர்கள் இல்லை. தமஸசோமா ஜோதிர் கமய என்ற வரி எளிதான எடை கொண்டது அல்ல. ஒன்றின் மதிப்பை  கூட்ட  மற்றொன்றின் மதிப்பை குறைப்பது இலக்கிய விமர்சனத்தில் மட்டுமல்ல எந்த விமர்சனத்திலும் சரியானது அல்ல. ஒன்றோடு ஒப்பிடுவது வேறு, தரடுத்துவது பட்டியல்யிடுவது வேறு. நான் காஃப்கா வாசித்ததில்லை. ஜி நாகராஜனை வைத்து அவர்களை புரிந்து கொள்கிறேன். நான் வாசித்ததிலேயே  நான் வெறுத்து ஒதுக்கி திருப்பி படிக்க கூடாது என்று முடிவெடுத்த படைப்பாளிகள் யுவன் சந்திரசேகரும், சாரு நிவேதிதாவும். ‘ஊர் சுற்றி’ மற்றும் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்சிபனியனும்’ வாசித்துவிட்டு மிக பெரிய ஒவ்வாமையை அடைந்தேன். நான் அடைந்த உணர்வே அவை Fake  என்பதுதான், ஆழமான உண்மையான தேடலோ இல்லை ஆனால் வெறும் பாவனைகளும் அங்கார தோரனையும் அவை கொண்டிருக்கின்றன, வாசகன் மேல் எந்த மதிப்பும் அற்ற படைப்புகள் என்ற் உணர்வை அடைந்தேன். ஆனால்  யுவனும், சாருவும் இந்த சில ஆண்டுகளில் பெரிதும் வாசிக்கப்படுகிறார்கள், மிக பெரிய கவனம் உருவாகியுள்ளது. ஏன் என்று திரும்பி வாசித்து அவர்களை மதிப்பிட வேண்டும். இன்று அத்தகைய  எழுத்துகளை புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு எப்படி யுவனோ அப்படி உங்களுக்கு காப்கா இருந்திருக்கலாம். ஆனால் உலகம் அவர்களை ஏற்பதற்க்கு பின்னால் உள்ள காரணத்தை ஒரு வாசகனாக பரிசிலிக்க வேண்டும்.

எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மிக பெரிய குறுட்டு கண்ணாடி Readers Ego. அதை அணிந்துகொண்ட பலர் படைப்புகளின் எளிய அழகுகளை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் ஒற்றைவரிக் கருத்துக்களாக பெரும் நாவல்களை சுருக்குவார்கள். தஸ்தாவஸ்க்கி நாவல்களில் கிருஸ்துவுக்கு நிகரான கதாபாத்திரங்கள் எழுதிக்காட்டபட்டுள்ளன, மிஸ்க்கின், அல்யூஷா போல, மாபெரும் அன்னைகள் எழுதபட்டுள்ளனர்  பின் ஏன் அவர் இருளை எழுதியதாக கருதப்படுக்கிறார். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ராஸ்கோல்நிக்கோவ் தானா தாஸ்தேவஸ்க்கி ?. அந்த ஒட்டுமொத்த நாவலையும் நிகழ்த்துவரின் மனம் ஒன்று இருக்கிறதே அதுதான் அவர். என்ன நிகழ்த்தபட்டு இருக்கிறதோ அதுதான் நாவல், அதன் சில  கூறுகள் அல்ல அந்த  நாவல். ஆனால் சில வாசகர்கள் நாவலில் வரும் மைய கதாபாத்திரத்தின் வாழ்க்கைக் கோணத்தை நாவலாசிரியரின் தரிசனமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். காடு நாவலில் கிரிதரனின் வாழ்க்கைப் பார்வைதான் நாவலின் தரிசனம் என்றால் சிரிப்பு வரும் இல்லையா. இன்னும்  குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாவல்களில்  சில பகுதிகள் மிக Intense ஆக வெளிப்படுகின்றன, நாவலுடைய ஒட்டுமொத்த மைய தரிசனம் அதன் உடன் முரண்படுவதாக  இருக்கலாம், ஆனால் அந்த intensity காரணமாக வாசகர்கள் அதுவே அந்த நாவல் அதுவே அந்த எழுத்தாளர் என்ற நம்பிக்கையை  சென்றடைகிறார்கள். அது பிழையான வாசிப்பாக அமைந்துவிடுகிறது.

சுசித்ரா

மற்றொன்று. இலக்கிய படைப்புகள் அவற்றின் பேசுப்பொருள் (Subject) சார்ந்தும் அவற்றின் வடிவம் (Craft) சார்ந்துமே மதிப்பிடப்படுகின்றன. உண்மையில் அவற்றின் மதிப்பும் அதன் அடிப்படையிலேயே உருவாகுகிறது. ஆனால் இந்த “subject – Craft” வாசகர்களாலும் விமர்சகர்களாலும் முழுமையாக வரையறுக்கப்படும் தோறும் அவை இலக்கணமாகின்றன. இலக்கணமாகும் தோறும் அவை மீறப்பட்டே ஆகவேண்டும். மீறப்பட்டால்தான் கலை வெளிப்படும். எட்டமுடியாத ஒன்றாகவும் புதிரானதாகவும் அது  ஆகிக்கொண்டே இருக்கும் தோறும்தான் கலை நுண்மையை நோக்கி  சென்று கொண்டிருக்கும். புதிய பேசுபொருளையும் சாத்தியத்தையும் நோக்கி நகரும். படைப்பை புரிந்து கொள்த்தான் வரையரைகள் தேவையாகின்றன. படைக்கபடும்போது போது புதிய வரையரைகளுடன் அவை பிறந்து வருகின்றன. வெண்முரசுக்கு  முன்னால் வெண்முரசு போன்ற வடிவம் ஒன்றை  யாரும் கற்பனை செய்திருக்க முடியுமா. நிகழ்ந்த பின் அதற்குள்ளேயே அதற்கான இலக்கணகள் வந்து  அமைந்துவிடுக்கின்றன இல்லையா. பழைய சன்னல்களை வைத்துக்கொண்டிருப்பவன் புதிய வானத்தை அளக்க முடியாது. புதிய வானத்தை பார்த்துவிட்டவனுக்கு  பழைய சன்னல் சிறியதாக தெரியும். கலை என்றும் திறந்திருக்கும் புதிய அகம் ஒன்றுக்காக எழுதப்படுகிறது.

சக்திவேல்

தாஸ்தாவஸ்க்கி முக்கியமான படைப்பாளியாக இருக்க காரணம் மிக பெரியது.  நடுவே பைத்தியமாகாமல்ல் முழு வெண்முரசையும் வாசித்தவன் அதை முழுவதுமாக வாசித்தானா என்று சொல்ல முடியாது. தாஸ்தாவஸ்க்கியின் எழுத்து அத்தகையது. இன்னொரு ஆல்டர் ரியல்ட்டி-மெய் நிகர் உலகம் -அவருடைய நாவல்வகளில் உள்ளது. நீண்ட தன்னுரையாடல்கள் அதில் உள்ளன. ஒருவன் ஒரு சாலை வழியாக நடந்து வருவதை பல பக்கங்கள் அங்கு நாம் படிக்கிறோம். கதாபாத்திரத்தின் அகத்துக்கு மிக அருகே நாம் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக தாஸ்தேவஸ்க்கியின் நாவல்கள் மிக சிறந்த Emotional Experience. அத்தகைய உணர்ச்சிகர அனுபவங்களை நாவலில் நிகழக் கைகூட பெற்றவன் அத்தகை மனஇயல்பு கொண்டவனாக இருக்க வேண்டும். இரண்டாவது சாதாரண மனிதர்கள் வழியாக நிகழும் Dramatic Moments. மற்றொன்று தாஸ்தேவஸ்கியின் அழகியலின் முக்கியமான கூறு அவர் கதை சொல்லும் தன்மையில் எந்த கதையும் அமைப்பதில்லை, மூன்றே பக்கங்கள் வரும் கதாபாத்திரமும் உண்மை என்று தோன்ற செய்கிறார். இயல்பாக உண்மையென அவர் ஒரு  நிகர் உலகை உருவாக்கிறார். கதை எழுதும் தோரணையே இன்றி கதை சொல்கிறார். அவரின் கதாபாத்திரங்களின் நகக்கணுக்களை கூட  நாம் அணுக்கமாக உனர்கிறோம். அவர் சித்தரிக்கும் மாலைகள், கோட்டுகள், குழந்தைகள், நடந்துக்கொண்டே இருக்கும் சாலைகள், பருகிய வைன்கள், பெண்கள், சிந்தப்படும் கண்ணீர் துளிகள், ஏற்றிவைத்த  விளக்குகள், பற்றி கொண்ட கைகள் என அனைத்தும் உண்மையானவையாக தூலமானவையாக வாசகனுக்கு தெரிகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக அதில் ஓயாது வந்துகொண்டிருக்கும் கிறிஸ்து. ஆன்மிக பயணத்தில் அறிதல் ஒருபுறம் என்றால் அகம் மறுபுறம். இரண்டின் மாறுதல்கள் வழியாகவே அந்த பயணம் சாத்தியம். தாஸ்தேவஸ்க்கி அகத்தை சித்தரித்த படைப்பாளி. அவர் காட்டும் உளவியல் வேறுபாடுகள் மட்டும் கொண்ட கதாபாத்திரங்களின் வகைகள் எத்தனை.

பிரதீப் கென்னடி

மற்றொன்று. எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த விவாதம் ஒன்றை நிகழ்த்துகிறார்கள். எழுதுவது வழியாக அவர்கள் செய்வதே அதைத்தான். வாழ்க்கையை நான் இவ்வாறு முன்வைக்கிறேன் என்று சொல்கிறார்கள். தஸ்தெவஸ்க்கி எழுதவேண்டியதை டாஸ்டாய் தீர்மானிக்கிறார். காஃப்காவோடும் சு.ராவோடும் ஜெயமோகன் ஒரு வாழ்க்கை விவாத்ததில் இருக்கிறார். அவர்கள் வேறு ஒருவருடன் அந்த விவாததில் இருக்கிறார்கள். பேசுபொருள் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் அந்த விவாதம் நிகழ்ந்தபடியுள்ளதே. அதனால்தான் இலக்கியம் இத்தனை வேறுபாடுகளுடன் அறுபடாது நிகழ்கிறது. அதானால்தான் எல்லா எழுத்தாளர்களுக்கும் தனக்கென ஒன்று சொல்ல இருக்கிறது.

நித்யா குறிப்பிடும் அந்த கொந்தளிப்பு நிலை காரணமாக, டால்ஸ்டாயை விட தாஸ்தேவஸ்க்கி ஒரு படி குறைவான படைப்பாளியாக இருக்கலாம்,  ஆனால் அந்த உயரம் எத்தனை மகத்தானது. ஏறிச்சென்று தெய்வத்தை அடையும் படிகளில் ஒன்றாக தான் ஆக அவர் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

பிரதீப் கென்னடி

https://pradeepkennedy.wordpress.com/

முந்தைய கட்டுரைகவிதைகள் பிப்ரவரி இதழ்
அடுத்த கட்டுரைகோமகள்