ஒலிநூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நம்முடைய ஒலி வடிவ புத்தகங்களை சென்னை ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்’ பகிர்ந்துள்ளேன். அது அங்கே வரும் பார்வையற்றோருக்கு ஒலி வடிவில் தரப்படும். தங்களின் “இந்திய ஞானம்” என்ற நூல் அங்கே யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு மாணவர்கள் தேடி படிக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதை அங்கே பணியாற்றும் ஸ்மித் என்பவர் தெரிவித்தார்.
ஒலி வடிவ நூல்களுக்கான இணையதளம் (www.perutchevi.com)ஒன்றை வடிவமைத்துள்ளேன். இதன் மூலம் புத்தகங்களின் பெயரைக் கொண்டும், எழுத்தாளர்களின் பெயரை கொண்டும் புத்தகங்களின் வகைகளை கொண்டும் சுலபமாக தேட முடியும். தங்களின் புத்தகங்களை பதிவிடுவதற்கு அனுமதி தந்ததிற்கு மிக்க நன்றி. குக்கூ சிவராஜ் அண்ணா அவர்கள் தன்னறம் நூல்வெளியின் மூலம் வெளிவந்த நூல்களை ஒலி வடிவில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.இந்த ஒலி வடிவ நூல்களை பார்வையற்றோர் பள்ளிகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையதளத்தை தேவையான நபர்களுக்கு பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
மனோ பாரதி விக்னேஷ்வர்.

ஒலிநூல்கள்

முந்தைய கட்டுரைஆங்கிலமும் நானும்
அடுத்த கட்டுரைஅக்னிசாட்சி- கடிதம்