நடராஜகுரு நூல்கள், இணையத்தில்

அன்புள்ள ஜெ

இன்றைய எழுத்தில் அடிப்படை வினாக்கள் கட்டுரையை வாசித்தேன். கட்டுரை முடிவில் நடராஜ குருவின் An Autobiography of Absolutist நூலை குறிப்பிட்டு, அதை வாங்குவதற்கான அமேசான் லிங்கை பகிர்ந்திருந்தீர்கள். நானும் சுட்டியை சொடுக்கி திறந்து பார்த்தேன். குருவின் நூல் முழுமையாகவும் இல்லை(161 பக்கங்கள் மட்டுமே), விலையும் அதிகம்(₹766). பின்னர் இணையத்தில் உலவியதில் கீழ்க்காணும் வலைதளத்தை கண்டடைந்தேன். முழு நூலையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து கொடுத்திருக்கிறார்கள். நடராஜ குரு, நித்யா இவர்களுடைய நூல்களை பெரும்பாலும் விற்பனை தளங்களில் காண முடிவதில்லை. ஆர்வமுள்ள வாசகர்களுக்கு இத்தளம் பயன்படும்.
நடராஜ குருவின் நூல்
வலைதளத்தின் முகப்பு பக்கம்
அன்புடன்
சக்திவேல்
முந்தைய கட்டுரைகல்மலர், கலிங்கம்- எம்.டியின் உலகம்
அடுத்த கட்டுரைசந்திப்புகள், பயிற்சிகள் -கடிதம்