சமூக வலைத்தளங்களும் இணையமும் தன்னைத்தானே இடைவிடாமல் பரிமாறிக்கொண்டிராமல், தன் தரப்புக்காக வாயில்நுரை தெறிக்க வாதிடாமல் உலவ முடிந்தால் மானுட வாழ்க்கையின் தருணங்களை காட்டுபவையாக அமையலாம். ஏனென்றால் அவை கோடானுகோடிபேரின் நேரடிப் பதிவுகள். அப்படியொன்று யூடியூபில் இன்று கண்டது.
(சேட்டாயீ என்பது கிறித்தவர்கள் செல்லமாக கணவனை, அண்ணனை அழைக்கும் ஒரு வார்த்தை)
அந்தக் கணக்கில் அதன்பிறகு ஒரு பதிவும் இல்லை. சாஜிதா மீண்டிருப்பாரா? ஓராண்டு கடந்துவிட்டிருக்கிறது.
கீழே ஒரு பதிவில் அதற்கு ஒரு பெண்மணி நானும் கணவனை இழந்தவள்தான், இது கடந்துபோகும் என பதிவிட்டிருக்கிறார்.
பாம்பே ரவி இசையமைத்த பாடல். பாடல் எழுதியவர் யூசஃப் அலி கேச்சேரி. படம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். நடித்திருப்பவர் பிரபல நடிகை ஷீலாவின் மகன்.
பாம்பே ரவி
*
மறந்ந்நோ நீ நிலாவில் நம்மளாத்யம் கண்டொரா ராத்ரி
கலாலோலம் கடாக்ஷங்ஙள் மனஸில் கொண்டொரா ராத்ரி
பிரியே நின் ஹாச கௌமுதியில் பிரசோபிதம் என்றே ஸ்மிருதிநாளம்
சதா பொரியுந்ந சிந்தயில் நீ சகீ குளிரார்ந்ந குஞ்ஞோளம்
எரிஞ்ஞ மூக வேதனயில் பிரபாமயம் என்றெ ஹர்ஷங்ஙள்
விருதா பரிசூன்ய நிமிஷங்ஙள் சுதாரஸ ரம்ய யாமங்கள்
*
மறந்துவிட்டாயா நீ நிலவில் நாம் முதலில் கண்ட அந்த இரவை?
கலைமென் பார்வைகள் மனதில் வந்து தொட்ட அந்த இரவை?
அன்பே உன் புன்னகையின் மலர்க்கொத்தில் ஒளிர்கிறது என் நினைவுச்சுடர்
எரிந்துகொண்டே இருக்கும் எண்ணங்களில் தோழி நீ குளிர்ந்த சிற்றலை
எரிந்தடங்கிய ஊமை வேதனையில் ஒளிர்கின்றன என் சிலிர்ப்புகள்
வீணான சூனிய நிமிடங்கள். மலர்மணம் நிறைந்த அழகிய இரவுகள்
ഞങൾ പ്രണയിച്ച കാലങ്ങളിൽ പരസ്പരം അയച്ച കത്തുകളിൽ ഈ പാട്ടിന്റെ വരികൾ ഉണ്ടാവും ഇന്ന് ഈ പാട്ട് കേൾക്കാൻ ഞാൻ തനിച്ചായി എന്നെ പിരിഞ്ഞിട്ട് 45ദിവസം മിസ്സ് യു ചേട്ടായി ലവ് യു 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Aneesh Sajitha
1 year ago