யோகம், ஆசிரியர்

யோக முகாம், கடிதம்

முழுமையான யோகம்

யோகம்: நல்லூழ் விளைவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீண்ட  நேர பயணத்திற்கு பின்பு பயிற்சி முகாமிற்கு மிக சரியாக பயிற்சி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சென்றடைந்தேன். குருஜி. சௌந்தர் அவர்களின் யோகா மரபினை பற்றிய விளக்கத்துடன் பயிற்சி தொடங்கியது.  யோகா மரபின் வகைகளை பற்றியும், ஒருவர் தனது எண்ணங்களும், ஆளுமைகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட யோகமரபினை பிரதானமாக பின்பற்ற வேண்டும். இதற்கான விழுப்புணர்வை அடைவதற்கான ஆரம்ப நிலை பயிற்சிகள் கற்பிக்க பட்டது.   இது ஒரு தொடக்கம் மட்டுமே, இதிலிருந்து நாம் அடையும் அனுபவமே நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும், தொடர் யோகா சாதகமே அதற்கான வழி என்றும் குருஜி அறிவுறுத்தினார்.

பயிற்சி இடைவேளைகளில் பொழுது நடைபெற்ற இயல்பான உரையாடல்கள் இந்த முகாமின் மிக சிறந்த தருணங்கள்.  எனது முந்தய யோகா பயிற்சி அனுபவங்களை ஒப்பிடும்பொழுது இது மிகவும் புதியது. ஆசிரியன் மற்றும் மாணவர்களிடையே  நடந்த உரையாடல்களுக்கான தளம்,  முன்பு அமைந்ததே இல்லை.  ஆசிரியர் பணியில் இருக்கும் எனக்கு இது மிக முக்கியம் என்று தோன்றியது.

இந்த மூன்று நாட்களுமே அனைவரும்  மிக மகிழ்வுடனும் அமைதியுடனும் இருந்தனர். நேர்மறையான எண்ணைகளுடனே அனைவரின் உரையாடல்களும் இருந்தது. எனது வாழ்வின் முக்கியமான மூன்று தினங்கள்.  நீங்கள் சொல்வது போல் யோகத்தினை வாழ்வியல் முறையாக மாற்ற முயல்கிறேன்.

நன்றி

இரத்தினசபாபதி
சென்னை

*

அன்புள்ள இரத்தினசபாபதி,

யோக மரபில் இரண்டு களங்கள் முக்கியமானவை. ஒன்று புறவாழ்வு. இன்னொன்று அகம். புறவாழ்வில் ஏன் உங்களால் ஒரு யோகப்பயிற்சியை தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி. யோகத்தால் உள்ளம் குவியும்போது நீங்களே உங்களை கவனிக்கிறீர்கள். அப்போது உருவாகும் கேள்விகள் இன்னொருவகை. நடைமுறை சார்ந்து முதல்வகைக்கும், தத்துவம் சார்ந்து இரண்டாம் வகைக்கும் வழிகாட்டி, ஆலோசனை சொல்லும் தனிப்பட்ட ஆசிரியர் எந்த ஒரு யோகப்பயிற்சிக்கும் அவசியம். அவருடனான சில ஆண்டுகள் தொடரும் உறவும் இன்றியமையாதது.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதம்
அடுத்த கட்டுரைகோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்