சு.வேணுகோபால் – தமிழ் விக்கி
ஜனவரி 8 ஆம் தேதி நான் ஒரே நாளில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். காலையில் தன்னறம் விருது சு.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் விழா. மாலையில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனின் நூல் வெளியீட்டு விழா.
இரண்டுமே பிடித்த நிகழ்வுகள். சு.வேணுகோபால் என் உள்ளத்திற்கினிய இளவல். விழாவில் நண்பர் பாவண்ணன், எழுத்தாளர் கோகுல் பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இடம் கவிக்கோ மன்றம், சென்னை. நேரம் காலை 10 மணி.
தெய்வீகன் தமிழ் விக்கி
தெய்வீகனின் ’நாடற்றவனின் கடவுச்சீட்டு’ உற்சாகமான வாசிப்பனுபவம்.முற்றிலும் புதிய களத்தில் துளித்துளியாகச் சிதறிய வாழ்க்கைகளின் சித்திரங்களால் ஆனது. ஜனவரி 8 மாலை 5:30 மணிக்கு நிகழும் அமர்வில் வெற்றிமாறன், லக்ஷ்மி சரவணக்குமார், தமிழ்ப்பிரபா ஆகியோருடன் நானும் பேசுகிறேன். இடம் அதே கவிக்கோ மன்றம், சென்னை. பொழுது மாலை 530 மணி.