ஓர் அதிகாரத்தை நிறுவுபவர்கள் அந்த அதிகாரத்தின் அடையாளமாக அந்த அதிகார அமைப்பு நீடிக்கும் வரை நினைவுகூரப்படுகிறார்கள். தியாகம், சேவை என வாழ்ந்தவர்களை இலக்கியம் மட்டுமே நினைவில் நீடிக்கச் செய்கிறது. அவ்வாறு நினைவில் நிறுத்தப்படாதவர்கள் மறக்கப்படுகிறார்கள். அது ஓர் அநீதி. தியாகமும் சேவையும் மறக்கப்படுமென்றால் அச்சமூகம் அடிப்படை விழுமியங்களை இழக்கிறதென்றே பொருள். தமிழகத்தில் காங்கிரஸ் பின்னணி கொண்ட ஆளுமைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தின் பகுதிகளாக இல்லை. அதிகாரம் நாடும் அமைப்பான காங்கிரஸ் அவர்களை நினைவுகூர்வதுமில்லை. அம்புஜம்மாள் அவர்களில் ஒருவர்
தமிழ் விக்கி எஸ்.அம்புஜம்மாள்