தனிவழிப் பயணி – வெளியீடு

தனிவழிப் பயணி

தனிவழிப்பயணி நூல் வாங்க

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதா பற்றிய கட்டுரை வேண்டும் என்று ஒருவரிடம் நீங்கள் கேட்டதாகவும், அவர் வசைபாடி அனுப்பியதாகவும் அவரே எழுதி ஒரு பதிவு சுற்றிக்கொண்டிருக்கிறது. அவரிடம் நீங்கள் கட்டுரை கேட்டது உண்மை என்றால் அவரை எந்த அளவில் மதிக்கிறீர்கள் என எழுதலாமே?

எந்த அடிப்படையில் தனிவழிப்பயணி என்னும் நூல் தொகுக்கப்பட்டது?

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்,

தனிவழிப்பயணி நூல் முழுக்க முழுக்க என்னால் தயாரிக்கப்பட்டது. வேறு எவருக்கும் அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. எங்கள் அமைப்பில் முறையாக ஒரு பொறுப்பு அளிக்கப்படாதவர் அதைச் செய்வதில்லை.

அந்நூலுக்காக நான் கட்டுரை கேட்டது நான்குபேரிடம் மட்டுமே. அவர்களில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் மிகத்தாமதமாக தந்தமையால் தொகுப்பில் சேர்க்க முடியவில்லை. எஞ்சிய மூன்றும் நூலில் உள்ளன. வேறெவரிடமும் கட்டுரை கோரவில்லை. விஷ்ணுபுரம் சார்பிலும் எவரிடமும் கட்டுரை கோரப்படவில்லை.

தானாகவே வாசகர்களாக எழுதி அளிக்கப்பட்ட கட்டுரைகள்தான் எஞ்சியவை. அவ்வாறு வரும் கருத்துக்களுக்கு வாசகமதிப்பு மிகுதி என்பது என் எண்ணம். எழுதவேண்டும் என்னும் உந்துதல் அவர்களுக்கு இயல்பாக உருவாகவேண்டும். ஆனால் அவை கடைசி நிமிடம் வரை வரவில்லை. வழக்கம்போல நூல் அச்சுக்குப் போனபின் வந்துகொண்டிருந்தன. 18 ஆம் தேதிவரை வந்தன. ஆகவே என் கட்டுரையை இணையத்தில் வெளியிடவில்லை.

நூலின் முதற்பதிப்பு முடிந்தபின் எஞ்சிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டு அடுத்த பதிப்பு வெளியாகும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇயல் விருதுகள் – 2022
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா – கடிதம்