நட்சத்திரவாசிகள் – ஆமருவி தேவநாதன்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

விஷ்ணுபுரம் விழாவில் கார்த்திக் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் என்று அறிந்தேன். நான் சமீபத்தில் வாசித்த, துறை சார்ந்த, தரமான புனைவெழுத்து அவருடையது. அவரது ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் குறித்த என் பார்வையை எழுதியிருக்கிறேன். (பெரிய அளவில் மற்ற மொழி இலக்கிய வாசகர்களையும் அந்த நாவல் சென்று அடைய வேண்டும் என்பதால் வேண்டுமென்றே ஆங்கிலத்தில்) இந்த நாவலையும், ‘மறுபடியும்’ என்னும் நாவலையும் தவிர்த்துத் தமிழில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிறிதொரு நல்ல நாவல் இருப்பதாகத் தோன்றவில்லை.

நன்றி
ஆமருவி.
முந்தைய கட்டுரையூசுப், கடிதம்
அடுத்த கட்டுரைஅதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு