அன்புள்ள ஜெ
கீழே இணைப்பில் நான் கொடுத்திருக்கும் ஒரு குறும்படம் “அத்வைதம்” (தெலுங்கு).
எனக்கு மிகுந்த மனஎழுச்சியை ஏற்படுத்திய இந்த படம் உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த ப்டம் மிகவும் பிடித்துபோக காரணம் இந்த மாதிரியான ஆயிரக்கணன்க்கான மனிதர்களின் வாழ்கையை சந்தோஷத்தை துக்கத்தை இயலாமையை ஒரு சாட்சியைப்போல பார்த்துகொண்டு காலத்தின் குறியீடு போல ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரி அன்னை. மல்லையாவின் உடலை, அய்யாவின் அஸ்தியை தனக்குள் உள்வாங்கி கொண்டு ஒழுகும் கோதாவரி. இந்த இடங்கள் தான் என்னை மனஎழுச்சியும் கண்ணீரும் வரவைத்தவை. இதை உடனே உங்களுடன் பகிர்ந்துகொள்ள தோன்றியது ஆகவே இந்த மின்னஞ்சல்.
அன்புடன்
சந்தோஷ்
http://ensanthosh.wordpress.
—
அன்புள்ள சந்தோஷ்
நல்ல படம்.
மென்மையானது, எளிமையானது. ஆனால் மனதைக்கவர்கிறது. காரணம் அதன் பண்பாட்டுக்கூறு. கோதாவரி. சட்டென்று அதன் கரையில் இருந்த நாட்களை நினைவூட்டி ஒரு இழப்புணர்வைக்கூட உருவாக்கிவிட்டது
எந்த நதியும் நம் நதியாகும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என் வீட்டுக்கரையில் வள்ளிக்கும் கோதைக்கும் எனக்கு வேறுபாடே தெரியவில்லை
ஜெ