விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க
விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து வெள்ளிவிழா ஆண்டு இது. நான்கு வெவ்வேறு பதிப்பகங்கள் வழியாக பல்வேறு பதிப்புகள் வெளிவந்த இந்நூல் இப்போது இந்நாவலின் பெயராலேயே அமைந்த பதிப்பகத்தில் இருந்து வெளிவருகிறது.
இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்நாவலின் பெயரால் தமிழகத்தின் முதன்மையான இலக்கிய அமைப்பான விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவாகியிருக்கிறது. அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும்
சென்ற கால்நூற்றாண்டில் இந்நாவல் பலதரப்பட்டவர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. இலக்கியவிமர்சகர்கள், மூத்த எழுத்தாளர்கள் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இதுவே கூறியிருக்கிறார்கள். இன்று மூன்றாம் தலைமுறை வாசகர்களால் முற்றிலும் புதியதாகக் கண்டடையப் படுகிறது. இந்நாவலின் தத்துவத் தளங்கள், பண்பாட்டுக் குறிப்புகள், கவித்துவ வாய்ப்புகள் இன்னமும்கூட முழுமையாக வாசித்து அடையப்படவில்லை. கடந்துசெல்ல முடியாத படைப்பு என்றே இன்றும் கருதப்படுகிறது.
இந்திய காவியமரபை உள்வாங்கி எழுதப்பட்ட இந்நாவல் பின்நவீனத்துவ எழுத்துமுறையான வரலாற்றையும் பண்பாட்டையும் புதியதாகப் புனைதல், இணைவரலாற்றை உருவாக்குதல் ஆகிய தன்மைகள் கொண்டது. மீபுனைவு என்னும் கதைக்குள் கதை, கதைபற்றிய கதை என்னும் உட்சுழற்சித் தன்மை கொண்டது. தமிழின் பெருமைக்குரிய படைப்புகளில் ஒன்றாகிய இது விரைவில் ஆங்கிலத்தில் உலகவாசகர்களுக்காக வரவுள்ளது.
(விஷ்ணுபுரம் நாவல் குறிப்பு)