ஊர் திரும்பல்

சென்ற 12 நவம்பர் 2022 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஒரு நீண்ட பயணம்.  நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் ஸ்வீடன் சென்றோம், அங்கிருந்து ஃபின்லாந்து, ஆர்டிக் வட்டத்திற்குள் ரோவநாமி (Rovaniemi) என்னும் ஊர் வரை. அங்கிருந்து திரும்பி சென்னை.

வந்திறங்கி சிலமணிநேரம் ஓய்வெடுத்து நானும் அருண்மொழியும் மட்டும் அப்படியே மலேசியா சென்றோம். அங்கே புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவில் (GTLF) கலந்துகொண்டோம். அருண்மொழி அவ்விழாவின் துணைநிகழ்வான பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் மொழியாக்கங்களின் வெளியீட்டில் உரையாற்றினாள். அதைப்பற்றி ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருக்கிறாள். என்னுடைய Stories Of The True நூல் அங்கே வெளியிடப்பட்டது. என்னுடன் ஒரு வாசகர் உரையாடலும் நடைபெற்றது.

அதன்பின் பினாங்கிலும் கூலிமிலும் சிலநாட்கள். 29 நவம்பர் 2022 அன்று திரும்பி சென்னை வந்து இன்று 30-நவம்பர் 2022 நாகர்கோயில் திரும்பினேன். உலகைச் சுற்றி வந்த உணர்வு.

முந்தைய கட்டுரைபொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்
அடுத்த கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா? – கடிதங்கள்