கனவு இல்லம்

கனவு இல்லம்- செய்தி

இவ்வாண்டுக்கான கனவு இல்லம் திட்டத்தின்படி பத்து எழுத்தாளர்களுக்கு இல்லங்கள் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி கண்டேன். நிறைவூட்டும் அறிவிப்பு இது. இல்லம் பெற்றவர்களில் திலகவதி போன்றவர்கள் ஏற்கனவே செல்வந்தர்கள். பொற்கோ போன்றவர்கள் துணைவேந்தர்கள். இந்த இல்லத்தில் அவர்கள் குடியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.ஆனால் இவ்விருதில் பொருளியல் நிலையை அளவுகோலாகக் கொள்ள இயலாதுதான்.பொதுவான அளவுகோலையே கொள்ள இயலும்.

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு இந்த இல்லம் மிகுந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இன்று தமிழகத்தில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பரிசுகளில் இதுவே பணமதிப்பிலும் பெரியது. இது இந்திய அளவிலும் ஒரு முன்னோடி திட்டம். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இல்லம்பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇமையத்திற்கு குவெம்பு விருது
அடுத்த கட்டுரைஆழத்தை துப்பறிதல், கடிதங்கள்