இன்று (21 நவம்பர்) காலை பத்து மணிக்கு ஸ்வீடன், ஃபின்லாந்து பயணம் முடிந்து குடும்பத்துடன் சென்னை வந்திறங்கினேன். ஓர் எண்ணைக்குளியல். சிறு தூக்கம். மாலையே கிளம்பி மலேசியா செல்ல சென்னை விமான நிலையம் வந்துவிட்டேன். 22 நவம்பர் 2022 அதிகாலையில் விமானம். நேராக பினாங்கு.
நானும் அருண்மொழியும் செல்கிறோம். அங்கே ஜார்ஜ்டவுன் லிட் ஃபெஸ்ட் என்னும் இலக்கியவிழாவில் பங்கெடுக்கிறேன். அதன்பின் வல்லினம் இலக்கிய விழா, சுவாமி பிரம்மானந்தரின் பிரம்மவித்யாரண்யத்தில் ஒரு நிகழ்ச்சி. இன்னொரு வாரம். இலக்கியம் வளர்ப்பதொன்றும் அவ்வளவு எளிய பணியாக இல்லை.