பத்துலட்சம் காலடிகள் வாங்க
பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
அன்புள்ள ஜெ
நான் துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். அது ஏன் என நானே யோசித்திருக்கிறேன். நண்பர்களிடம் பேசும்போது அவர்களெல்லாம் துப்பறியும் கதைகளை உதாசீனம் பண்ணி பேசுவதுண்டு. என்ன காரணம் என நான் யோசிப்பேன். துப்பறியும் கதையின் பார்ம் என்பது மனுஷ மனசு ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியக்கூடிய அதே பார்ம் தான் . ஒரு சின்ன க்ளூ கிடைத்ததுமே நம் மனசு அலெர்ட் ஆகிவிடுகிறது. அதை அலசிக்கொண்டே இருக்கிறோம். மேலே மேலே செல்கிறோம். அப்படித்தான் எல்லாவற்றையும் அறிகிறோம். இதேதான் துப்பறியும் கதைகளில் உள்ளது. கதைகளுக்கு ரெண்டு பேட்டர்ன்தான் உள்ளது என நான் நினைக்கிறேன். ஒன்று துப்பறிந்துகொண்டே செல்லும் கதை. இன்னொன்று அறிந்ததை விஸ்தாரமாகச் சொல்லும் கதை. நம்மவர் என்ன நினைக்கிறார்கள் என்றால் இரண்டாம் பேட்டர்ன் தான் சிறப்பு என்று. அத்து அப்படி இருக்கவேண்டும் என்னும் அவசியம் இல்லை. துப்பறிந்துசெல்லும் பேட்டர்னும் நல்ல கதையாக இருக்கலாம். உலகில் ஏராளமான கதைகள் அப்படி உள்ளன. எனக்கு அந்த பாணி கதைகளில் எடித் வார்ட்டன் மேல் பெரிய ஈடுபாடு உண்டு. அவருடைய பேய்க்கதைகளும் துப்பறியும் கதைகளும் மனுஷ மனசுக்குள் ஆழமாகச் செல்லும் கதைகள்.
இந்த புனைவுக் களியாட்டுக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் ஔசேப்பச்சன் வரும் கதைகள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது. (இழை என்ற கதையும் துப்பறியும்கதைதான்) இந்தக்கதைகளிலுள்ள lucidity யும்சரி foreceம் சரி சாதாரணமான கதைகளில் வருவதில்லை. அதிலும் ஓநாயின் மூக்குதான் இந்தவகையில் மிகச்சிறப்பான கதை என நினைக்கிறேன். அது சரித்திரம் முதல் சமகாலம் வரை இருந்து வரும் ஒரு மானசீகமான தொடர்ச்சியை அல்லது subconscious continuity மாதிரி ஒன்றைச் சொல்கிறது. சரித்திரம் சமகாலம் மனுச மனசு எல்லாமே ஒரே narration தான் என்று சொல்கிறது. சிறப்பான கதைகள்
ரங்கராஜ் கிருஷ்ணசாமி
*
அன்பிற்குரிய ஜெ
பத்துலட்சம் காலடிகள் முதலிய கதைகளை வாசித்தேன். மிகச்சிறப்பான கதைகள். துப்பறியும் கதைகளுக்குரிய கிளீஷேக்கள் இல்லை. துப்பறியும் கதையில் அறிவியல் முறைகளைவிடpsychological வழிமுறைகளே அதிகமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. துப்பறிவதன் தியரிதான் அதிகமும் பேசப்படுகிறது. அது சுவாரசியமாக உள்ளது
என்.ஜெ.மாணிக்கம்