மலைதெய்வங்களின் அருள் – கடிதம்

மலைபூத்தபோது வாங்க

மலைபூத்தபோது மின்னூல் வாங்க

ஜெயமோகன் நூல்கள் வாங்க 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

அண்மையில் காந்தாரா சினிமா பார்த்தேன். அதில் வரும் நாட்டுப்புறக் கலையின் தீவிரம் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது. நாட்டார் கலைகளை நாம் உதாசீனப்படுத்துகிறோம். அவை கலை அல்ல. ஒருவகையான தெய்வ வெளிப்பாடுகள். அதை காந்தாரா போன்ற ஒரு சினிமா contextualize செய்து காட்டினால்தான் உறைக்கிறது. அப்படி உணர்ந்தபின் உங்களுடைய தூவக்காளி கதையை வாசித்தேன். பிரமிக்க வைக்கும் வாசிப்பு. அந்த இளைஞரில் உருவாகி வரும் sence of justice தான் தெய்வம் என்றால் தப்பில்லை. அந்த trance தான் நம்முடைய ஆதி மனதின் வெளிப்பாடு. அற்புதமான கதை. 

ஜெயராமன் மகாலிங்கம்

அன்புள்ள ஜெ,

மலைபூத்தபோது தொகுதியிலுள்ள ஒவ்வொரு கதையுமே மகத்தான அனுபவங்கள் என்றுதான் சொல்லவேண்டும். நம் தொல்குடி மனம் எப்படியெல்லாம் வெளிப்பட்டு வருகிறது என்பதையே அது காட்டுகிறது. ஊரை சபிக்க வந்து வாழ்த்திவிட்டுச் செல்லும் மலைதெய்வத்தின் பூசகன் மனதில் நிறைந்திருக்கும் மலைதெய்வத்தை நினைத்தபோது கண்ணீருடன் வணங்க தோன்றியது.

ஆர்.கணேஷ்

முந்தைய கட்டுரையாழ்ப்பாணமும் தமிழும், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை சந்திப்பு, ஜீவகரிகாலன்