சாங்கோபாங்கம் என்றால் ச அங்கம் + உப அங்கம் என்று பிரித்து, உடலுடன் இணைந்தவையும், எல்லா உறுப்புகளும் என பொருள்படும். அதாவது முழுதுடலும். சாங்கோபாங்கமாக விழுந்து கும்பிடுதல்.
அப்பெயரில் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர் தமிழரல்ல, கோவாவைச் சேர்ந்தவர். தமிழுக்கும் தமிழருக்கும் பணிபுரிந்த கிறிஸ்தவ மதபோதகர்களில் ஒருவர். ஜாக்கோமே கொன்சால்வெஸ் என்னும் இயற்பெயர் கொண்டவர்
சாங்கோபாங்கர்