ராஜம்மாள் தேவதாஸ்

உயர்கல்வி கற்றவர்கள் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வசதியான பதவிகளில் அமர்ந்து மேலும் மேலும் வெற்றிபெறும்போது அதுவே இயல்பானது என நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் இந்தியாவின் பின்தங்கியச் சூழலையும், வசதியின்மைகளையும் குறைகூறுவது இன்று ஒரு பெரிய மோஸ்தர். அண்மையில் இணையம் வந்தபின் அவர்கள் இந்தியாவுக்கு அரசியல், பொருளியல், சமூகவியல் ஆலோசனைகளையும் சொல்லுவது மிகுதி.

ஆனால் உயர்கல்வி பெற்ற ஒருவர் இந்தியாவில் மிகமிக எளிய வாழ்க்கை வாழ்ந்து, இங்குள்ளவர்களுக்காக உழைப்பதைக் கண்டால் நமக்கு ஒரு திகைப்பு உருவாகிறது. நாமும் இங்குதான் இருக்கிறோம். அவர்களின் சேவை நமக்கு உதவுகிறது. ஆனால் நம் கனவுகள் முதல்வகையினரை ஒட்டியவை. இவர்கள் நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். நம் பாதையை குழப்புகிறார்கள்.

ராஜம்மாள் தேவதாஸ் அத்தகையவர். அவரைப்போன்றவர்களை இயக்கிய இலட்சியவாதம் காந்தியுடையது.

ராஜம்மாள் தேவதாஸ்

முந்தைய கட்டுரைபிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அடுத்த கட்டுரைமமங் தய், அருணாச்சல் கதைகள்