பாண்டித்துரை தேவர்- பாண்டியப் பேரரசர்

 

பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்த்த கொடைவள்ளல் என்ற வகையில் பொதுவான ஓர் அறிமுகம் எனக்கிருந்தது. நான்காம் தமிழ்ச்சங்கம் என்னும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். ஆனால் தமிழ்விக்கி பணிகளில் ஈடுபட்டபோதுதான் அவருடைய பேருருவம் தெரிந்தது. தமிழில் நடைபெற்ற அனைத்து மாபெரும் அறிவுப்பணிகளுடனும் இருந்திருக்கிறார்.

அவர் இல்லையேல் அபிதான சிந்தாமணி இல்லை. விபுலானந்தரின் யாழ்நூல் இல்லை. தொல்காப்பியப் பதிப்புகள் இல்லை. எவ்வளவு பெரும்பணி. தமிழ்வளர்த்த பணியை நாம் அரசுகளின் பெயரில் ஏற்றுகிறோம். அரசியலியக்கங்களுக்கு அளிக்கிறோம். பாண்டித்துரைத் தேவர் எந்த அரசையும் விட பெரும்பணி ஆற்றியிருக்கிறார். அவர் சங்கம் வளர்த்த தொல்பாண்டிய பேரரசர்களைவிட ஒரு படி மேலானவர் என்று நினைக்கிறேன்.

பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரைத் தேவர்
பாண்டித்துரைத் தேவர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவிஜயா வேலாயுதம், கடிதம்
அடுத்த கட்டுரைதேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு